புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி

கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
வாக்குரிமை என்பது தனிமனித உரிமையாகும். அதனை நாம் பயன்படுத்திவிட்டால் மாற்றானுக்கு சாதகமாகிவிடும் என்பதால் 29ஆம் திகதி காலையிலேயே அனைத்து வாக்காளர்களும் ஏணி சின்னத்துக்கு வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை வெற்றிபெறச் செய்வதோடு தலைவர் மனோ கணேசனின் கரங்களைப் பலப்படுத்துமாறும் குருசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார் தலைமையில் முகத்துவாரத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போதே குருசாமி மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் ஜனநாயக இளைஞர் இணையத் தலைவர் சண்.பாஸ்கரன், சமூக ஆர்வலர்களான பழ.புஷ்பநாதன், சே.சத்திய மூர்த்தி, ப.பத்மநாதன், என்.செல்வரட்ணம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு வேட்பாளர் குருசாமி மேலும் கூறுகையில்,
வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்திருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் தலைவர் மனோ கணேசனின் அரசியல் பயணம் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் முன்வைத்த கருத்துக்கள் உண்மையாக இருக்கின்றன.
 
அமரர் சௌமிய மூர்த்தி ஜயாவின் பின்ன தீர்க்கதரிசனம் கொண்ட இளைய தலைவராக மனோ கணேசனை சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம் அவர் தலைவர் மீதும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மீதும் எந்தளவு பற்று வைத்துள்ளார் என்பது புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.
 
அந்த வiயில் கொழும்பு வாழ் எமது உறவுகள், மலையக புத்திஜீவிகள் இளைஞர் சமூகம் என சகலதரப்பினரும் அணியாக திரண்டு தலைவர் மனோ கணேசனைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது ஓர் வரலாற்றுக்கடமையாகவும் சமூக பொறுப்பாகவும் ஒவ்வவொரு மனதிலும் பதிய வேண்டும். 
 
தமக்கே உரிய வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்தி ஏணி சின்னத்துக்கு வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அமோக வெற்றியீட்டுவதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் வழிவகுக்க வேண்டும்.
 
நான் கடந்த 15 வருடங்களாக கொழும்பு மாநகர சபையிநூடாக மக்கள் பணியாற்றி வருகிறேன். இதன்மூலம் சிறந்த சேவையை முன்னெடுப்பதற்கான அரசியல் ரீதியான அனுபவத்தையும் பெற்றுக்கொண்டுள்ளேன்.
 
எனது சேவை மாநகர சபையுடன் நின்றுவிடாது மாகாணசபையூடாக பரந்தளவில் மேற்கொள்வதற்கே எண்ணுகின்றேன்.
 
தலைவர் மனோ கணேசனின் வழிகாட்டலும் மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமாரின் ஆலோசனையூடாகவும் எனது  சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றேன். அதேபோன்று சமூக ஆர்வலர் நலன்விரும்பிகள் மற்றும் புத்திஜீவிகளது அறிவுரைகளும் மக்களின் அரவணைப்பும் எனக்கு மகிழ்ச்சியைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
 
கடந்த 6 வாரங்களாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அன்போடும் ஆதரவோடும் வரவேற்ற எனது மக்களை, தாய் தந்தையரை, சகோதரஙகளை இந்த நேரத்துல நினைவுபடுத்திக்கொள்கிறேன்.
 
அத்துடன் எமது வாக்குரிமையை நாம் பிரிதொருவருக்கு விட்டுக்கொடுத்துவிடாத வரையில் அதனை நாமே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் ஏணி சின்னத்தை மனதில் இருந்திக் கொள்ளுமாறும் தயவாக கேட்டுக்கொள்கிறேன்.
 
எனது சமூகத்துக்காக இயன்ற அனைத்தையும் செய்வதற்கு காத்திருக்கிறேன.

ad

ad