புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014


பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த ஆட்சியாளர் முயற்சிஇன்றுமனித உரிமை விட­யங்கள் தொடர்­பாக சர்­வ­தே­சத்­திடம் முறைப்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. உள்­நாட்டு அர­சியல் கட்­ட­மைப்பில் ஜன­நா­யக முறையில் நம்­பிக்கை இழந்­த­மையால் இந்த நிலை அதி­க­ரித்து வரு­கின்­றது.

எனவே மனித உரிமை விட­யங்­களை உரிய முறை
யில் கையா­ளு­மாறு சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்க கூடிய நிலை­மைகள் உரு­வா­கலாம். பொது­வு­டமை வாதி­க­ளான நாம் இந்தப் பாதையில் முற்று முழு­தாக பய­ணிக்க முடி­யாது. இன்று நாடு தழு­விய ரீதியில் வேலை நிறுத்­தங்கள் எதிர்ப்பு போராட்­டங்கள் அதி­க­ரித்த நிலை காணப்­ப­டு­கின்­றது.
இத்­த­கைய போராட்ட நிலை­மை­களை திசை திருப்பும் நோக்­கத்­துடன் ஏனைய தேசிய இனங்­களை வருத்­து­கின்ற செயற்­பா­டுகள் அதி­க­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. பேரி­ன­வாத நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுப்­பதன் மூலம் தனது அர­சியல் இருப்பை தொடர்ந்தும் உறு­திப்­ப­டுத்­தவும் ஆட்­சி­யா­ளர்கள் முனை­கின்­றனர்.
இன்று தென் இலங்கை மக்­க­ளுக்கு தமிழ் மக்­களின் நியா­ய­மான பிரச்­சி­னைகள் அவர்­க­ளுக்கு உரிய அதி­கா­ரப்­ப­கிர்­வுகள் சுயாட்சி உரி­மைகள் இவற்­றுக்­குள்ளே முஸ்லிம் மக்­க­ளுக்­கான உரி­மைகள் தொடர்­பாக கருத்­துக்­களை முன்­வைப்­பதில் ஆர்வம் காட்­டப்­ப­டாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இது கவலை தரும் விட­ய­மாகும்.
தென்­னி­லங்­கையில் முழு மக்­களும் இன­வா­திகள் அல்லர். ஒரு சிறு பிரிவினர் இன­வா­தி­க­ளாக உள்­ளனர். எனது முன்னை நாள் நண்பர் வாசு­தேவ நாண­யக்­கார தமிழ் மக்­களின் அர­சியல் தீர்­வுக்கு ஜனா­தி­பதி ராஜபக் ஷவே தடை­யாக இருக்­கின்றார் எனக் கூறி­யுள்ளார். இது முற்று முழு­தான உண்­மை­யாகும். உண்­மையில் ஆட்­சித்­த­ளத்­தினுள் அர­சியல் தீர்­வுக்கு சார்­பாக சக்­திகள் உள்­ளனர். சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் கூட இத்­த­கைய போக்கை உடை­ய­வர்கள் உள்­ளனர். எனவே தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக கருத்து முன் வைப்­புக்கள் பல வழி­களில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இத்­த­கைய பாதையை பிழை­யென யாரும் கூறு­வார்­க­ளாயின் அதை ஒரு போதும் ஏற்க முடி­யாது.
இன்று பலர் சர்­வ­தேச சக்­தி­களின் அதீத நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்­டுக்கு தமிழ் மக்­க­ளுக்கு பேர­ழிவை ஏற்­ப­டுத்­திய யுத்­தத்தை முன்­நின்று நடத்­தி­ய­வர்கள் இதே சர்­வ­தேச சக்­தி­களே குறிப்­பாக அமெ­ரிக்க பிரித்­தா­னிய இந்­தியா இதில் முதன் நிலையில் நின்­றன. பிர­பா­க­ரனின் உயிர் பிரியும் வரை இவர்கள் யுத்­தத்தை ஊக்­கு­வித்­தனர்.
இன்று இவர்கள் அர­சியல் தீர்வைத் தரு­வார்கள் என நம்­பிக்கை கொள்ள முடி­யுமா? தமிழ் மக்கள் மீது புரி­யப்­பட்ட கொடு­மை­களின் கறைகள் இவர்­களின் கைகளில் இன்றும் உள்­ளன. இதைச் சுத்தம் செய்­யவே இன்று பல நாட­கங்­களை நடத்­து­கின்­றனர். எனவே பேரி­ன­வாத தளத்தில் உயிர் வாழ நினைக்கும் இந்த ஆட்­சித்­தளம் முதலில் வீழ்த்­தப்­பட வேண்டும். இதன் மூலமே விடு­த­லைக்­கான முதற்­ப­டியை நாம் எட்ட முடியும். இந்த இலக்கை அடைய தமிழ் முஸ்லிம் சிங்­கள மக்­களின் ஒன்­றி­ணைந்த பொது முன்­னணி உரு­வாக வேண்டும்.
இத்­த­கைய முயற்­சி­களில் நாம் கடந்த காலங்­களில் ஈடு­பட்டே வந்தோம். அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்பை உரு­வாக்­கினோம். இதில் நான் மனோ­க­ணேசன், அசாத்­சாலி சுமந்­திரன் ஆகியோர் இணைந்து செயற்­பட்டோம். துர­திஷ்­ட­மாக தேர்தல் வந்த­வுடன் தத்­த­மது இனக் குழு­மங்­களின் தலை­வர்­க­ளாக நாம் மேல் வர வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் எமது தலை­வர்கள் செல்ல முற்­பட்­டதால் நாம் உரு­வாக்­கிய அணி ஒரு பொது அமைப்­பாக தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாமல் போய் விட்­டது. இத்­த­கைய ஐக்­கியம் சிதைந்து தனி­யாக போட்­டி­யிடும் நிலைக்கு நாம் தள்­ளப்­பட்­டுள்ளோம்.
தமிழ் மக்­களின் போராட்ட நியா­யப்­பா­டுகள் தொடர்­பாக தென்­னி­லங்­கையைச் சேர்ந்த நான் கருத்­துக்­களை முன்­வைத்தால் அந்த கருத்­துக்கள் ஏனை­ய­வர்­களின் கருத்­துக்­களை விட அதிக தாக்­கத்தை தேசிய ரீதி­யிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் தாக்­கத்தைச் செலுத்தும்.
பிரித்­தா­னிய பரா­ளு­மன்ற வளா­கத்­தினுள் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் யுத்த இழப்­புக்கள் தொடர்­பாக அங்கே உண்மை நிலை­களை ஏற்­காத நிலை காணப்­பட்­டது. ஆனால் இறுதி யுத்­தத்தில் 1½ லட்சம் தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டனர் என்­பதை தக்க ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பித்தேன். கூட்டம் முடிந்த பின் பல பிர­தி­நி­திகள் எனது கருத்தை ஆத­ரிக்கும் நிலை காணப்­பட்­டது. இன்று தென்­னி­லங்­கையில் மாற்­றங்கள் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளன. இத்­த­கைய கால கட்­டத்தில் தமிழ் மக்­களின் போராட்­டங்கள் தொடர்­பாக தென்­னி­லங்கை மத்­தியில் செயற்­பட எனக்கு மக்கள் அங்­கீ­காரம் தேவை. எனவே இந்த தேர்தல் மூல­மாக எனக்கு அங்­கீ­கா­ரத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ad

ad