புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என அழைக்கலாமா?

L
மதிமுக தேர்தல் அறிக்கையில், "இந்தியா,  ‘இந்திய ஒன்றியம்’ ( Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள்’ (  United states of India) என்று அழைக்கப்பட வேண்டும் என  ம.தி.மு.க. வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முன் முயற்சிகளை ம.தி.மு.க. மேற்கொள்ளும்" எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்னை, நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு
பிரச்னைகளில்தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கவும், தலையிடவும் செய்வதாகவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே கடந்த காலங்களில் குற்றம் சாட்டி வந்த நிலையில், அக்கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை, மற்ற அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்கவைத்துள்ளது.
அதே சமயம் ம.தி.மு.க.வை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொண்டுள்ள பா.ஜனதா, இதுகுறித்த தங்களது நிலையை தெளிவுப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. 

ad

ad