புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

குருநகர்கார்மேல்போய்ஸ் விளையாட்டுக்கழகம்திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டு கழகமும் சைவ பள்ளிக்கூட நண்பர்களும் இணைந்துஅமரர் கணேஷ் தர்மகுலசிங்கம் ஞாபகார்த்தமாக நடாத்தும் கிரிக்கெட் சுற்று போட்டியின்  50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது 



கொக்குவில் ஸ்ரீ காமாட்சி வி. கழகத்தினை வீழ்த்தி 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி
குருநகர்  50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி குருநகர்கார்மேல்போய்ஸ் விளையாட்டுக்கழகம் 1986-06-10 திகதி மண்டதிவுகடற்கரைப் பகுதியில் எம் குருநகர் சேர்ந்த 31கடத்தொழிலாலர்கள் படுகொலை செய்யப்படார்கள் அவர்களுக்கு எமது 50வது வெற்றி கிண்ணத்தை அற்பனிக்கின்றோம் 
திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டு கழகமும் சைவ பள்ளிக்கூட நண்பர்களும் இணைந்துஅமரர் கணேஷ் தர்மகுலசிங்கம் ஞாபகார்த்தமாக நடாத்தும் கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப்போட்டியில் கொக்குவில் ஸ்ரீ காமாட்சியை வீழ்த்தி 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது குருநகர் கார்மேல்போய்ஸ் விளையாட்டுகழகம்
22-03-2014 இன்று முத்துதம்பி மைதானத்தில் நடந்த 9பேர் 12பந்துப்பரிமாற்றதினை கொண்ட போட்டியில் இறுதிப்போட்டியில் ஸ்ரீகாமாட்சி விளையாட்டுகழகத்தை எதிர்த்து குருநகர் கார்மேல்போய்ஸ் விளையாட்டுகழக்கம் மோதிகொண்டது
இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான ச.சுகிர்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு முதலில் ஒழுங்கு செய்திருந்த நடுவர் ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தால் சமூகம் அளிக்காததால் பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தான் நடுவராக கடமையாற்றுவதாக கூறி நடுவராக கடமையாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாணனய சுளட்சியில் வென்ற குருநகர் கார்மேல்போய்ஸ் வி.க முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது முதலில் துடுப்பெடுத்தாடிய குருநகர் கார்மேல்போய்ஸ் வி.க 12பந்து பரிமாற்றத்தின் நிறைவில் 7இலக்கு வீழ்த்தப்பட நிலையில் 102 ஓட்டங்களை பெற்றது இதில் அதிக ஓட்டங்களாக அ.த தேசியன் 40 ஓட்டங்களையும் சுகதாஸ் 25ஓட்டங்களையும் பெற்றனர்
பதிலுக்கு துடுப்போடுத்தாடிய கொக்குவில் ஸ்ரீ காமாட்சி வி.க 103ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது 2வது பந்து பரிமாற்றத்தில் பவீன் அவர்கள் தமது நுட்பமான பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர் இருவரையும் அடுத்தடுத்து சாய்த்தார் ஆரம்பத்தில் தடுமாறிய ஸ்ரீ காமாட்சி வி. கழகத்தை ரொனி , சிந்து ஆகியோரின் பொறுப்பான துடுபாட்டம் தடுமாற்றத்தில் இருந்து காப்பாற்றியது 12 பந்துபரிமாற்றத்தின் முடிவில் 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது இதன் மூலம் தனது 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது குருநகர் கார்மேல்போய்ஸ் வி .கழகம்
சிறந்த பந்து வீச்சாளராக கார்மேல்போய்ஸ் வி.கழகத்தின் அலன் அவர்கள் தெரிவு செய்ய பட்டார்
ஆட்ட நாயகனாக கார்மேல்போய்ஸ் வி.கழகத்தின் தேசியன் அவர்கள் தெரிவு செய்ய பட்டார்
தொடர்ஆட்ட நாயகனாக ஸ்ரீ காமாட்சி வி.கழகத்தின் சிந்து அவர்கள் தெரிவு செய்ய பட்டார்
இதுவரை 7 இறுதிபோட்டிகளில் கொக்குவில் ஸ்ரீகாமாட்சி அணியினரை எதிர்த்து குருநகர் கார்மேல்போய்ஸ் வி .கழகத்தினர் மோதிகொண்டனர் அதில 6 போட்டிகளில் குருநகர் கார்மேல்போய்ஸ் வி .கழகத்தினர் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
எமது கழகம் உருவாக்கி 10 வருடம் நடைபெருகின்றதேன்பதும் குறிப்பிடத்தக்கது

ad

ad