புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

ஜெனீவாவில் அமெரிக்க யோசனையில் மேலும் ஒரு மாற்றம்!- எம்.ஏ. சுமந்திரன்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இன்னும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கோடிட்டு இந்த செய்தியை ஆங்கில செய்தித்தாள் ஒன்று பிரசுரித்துள்ளது.
இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒரு காலவரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த மாற்றமாக இருக்கும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா யோசனையின் இறுதி வாக்கெடுப்பின்போது முஸ்லிம் நாடுகளின் நிலைப்பாடு பற்றி கூறியுள்ள அவர் இலங்கையின் மதத் தலங்கள் தாக்கப்படுவது உட்பட்ட விடயங்களை அந்த நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அமரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையின் முதலாவது வரைபை விட இரண்டாவது வரைபு காத்திரமிக்கதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக சுமந்திரன் கூறினார்.
இலங்கை தோற்றால் தமிழ் மக்கள் வெற்றியீட்டுவர்- சுமந்திரன்
இலங்கை தோல்வியடைந்தால் தமிழ் மக்கள் வெற்றியீட்டுவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது தமிழ் மக்ளின் வெற்றியாகவே கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல் மற்றும் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றல் ஆகியன தொடர்பிலான விடயங்களை தீர்மானத்தில் உள்ளடக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் பல தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளின் நிலைப்பாட்டை உறுதியாக குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad