சனி, ஏப்ரல் 05, 2014

ஆ.ராசாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று இரவு 14 வேட்பாளர் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு 2 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் ஒன்று நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர் ஆவார். அவரது பெயர் எம்.டி.ராணி. கல்வியாளரான இவர், இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.