புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2014

ஜெ யலலி தாவுக்கு எம் ஜி ஆரே  எதிரிதனே சிதம்பரம் பஞ்
டந்த 10 ஆண்டுகளில் மத்தியில் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம், சமீபமாக மிக முதிர்ந்த அரசியல் தியாகி போல பேசுகிறார்.
இந்தியா முழுக்க அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, சிவகங்கைத் தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பதில் பரபரப்பாக இருக்கிறார் ப.சி. டெல்லிக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன் ஒரு ஞாயிறு பகலில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இருந்து...
''கடந்த 10 ஆண்டு காலத்தில் மத்திய
உள்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் செயல்பட்டுள்ளீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் சாதனை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?''  
''ஏழு ஆண்டுகள் நிதி அமைச் சராக இருந்து ஆறு நிதிநிலை அறிக்கைகளைத் தந்திருக்கிறேன். அதில் முதல் ஐந்தாண்டுகளில் 8.5 சதவிகித வளர்ச்சியடைந்தது நாடு. காங்கிரஸ் கட்சியின் பரம விரோதிகள்கூட  இந்த வளர்ச்சியை மறுக்க முடியாது. நான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சமயம் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவின் வளர்ச்சியைப் பாதித்தது. அந்தச் சமயம் வளரும் நாடுகளின் பொருளாதார பலத்தை அளவிடும் அமைப்புகள் இந்தியாவின் தரப்புள்ளியைக் குறைக்க இருப் பதாக அறிவித்தன. அதுமட்டும் நடந்திருந்தால், இந்தியா மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும். ஆனால், அதிலிருந்து மீண்டு ரூபாயின் மதிப்பை உயர்த்தி இருக்கிறோம். எங்கள் ஆட்சியின் பின்பகுதி ஐந்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டால்கூட ஏழு சதவிகித வளர்ச்சியை எட்டியிருப்பதும் நிச்சயம் சாதனைதான். அதற்காக இரவு-பகல் பாராமல், உணவு, உறக்கம் பாராமல் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் அந்த இக்கட்டான காலத்தைக் கடக்க உதவியது!''
''அந்தச் சாதனைகளின் பெருமிதத்தை தேர்தலில் அறுவடை செய்யாமல், உங்கள் மகனை ஏன் களம் இறக்குகிறீர்கள்? 'தோல்வி பயத்தில் அஞ்சுகிறார் சிதம்பரம்’ என்ற எதிர்க் கட்சிகளின் பிரசாரம் உண்மையா?''
''இது கலியுகம். இந்த யுகத்தில் இப்படியான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஒரே தொகுதியில் எட்டுத் தேர்தல்களில் போட்டியிட்டு   ஏழு முறை வென்றவன் நான். இதுவரை தேர்தல்களில் போட்டியிடாதவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. ஒருவேளை தோல்வி பயத்தால் நான் தேர்தல் களத்தில் இருந்து விலகுகிறேன் என்றால், என் மகனை ஏன் நான் களமிறக்க வேண்டும்?
கடந்த 10 ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 17 முதல் 18 மணி நேரம் வரை செலவழித்து இந்த நாட்டின் மிகப் பெரிய இரண்டு பொறுப்புகளில் பணி புரிந்திருக்கிறேன்.  ஆகவே, எஞ்சிய என் வாழ்நாட்களை நான் விரும்பும் வகையில் செலவிடப்போகிறேன். வாழ்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட் போல இரண்டு இன்னிங்ஸ் கிடையாது. ஒரே இன்னிங்ஸ்தான். அந்த ஒரு இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களை எப்படி விளையாட வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட்டால்,  'பதவி ஆசை’ என்கிறார்கள். தேர்தல் அரசியலில் இருந்து விலகினால், 'பயந்து பின்வாங்குகிறார்’ என்கிறார்கள். இதைத்தான் கலியுகம் என்கிறேன்!''
''சிவகங்கைத் தொகுதியில் உங்கள் மகன் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெறுவாரா?''
''ஐந்து முனைப் போட்டி நடைபெறும் நிலையில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்பதுதான் நிலை. நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது!''
''தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ள இருக்கிறது?''
''தமிழகத்தின் பல கிராமங்களில் 'மோடி’ என்ற பெயரையே மக்கள் இன்னும் கேள்விப்படவே இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் வேரும் கிடையாது; கிளையும் கிடையாது. தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற குறுகிய எல்லைக்குள், குறுகிய கொள்கைகளைக்கொண்ட கட்சிகளின் தோள்களில் ஏறி அவர்கள் வலம் வருகிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஒரே பலம்... பண பலம். 40 ஆண்டுகளாக தமிழகம் போற்றி வளர்த்த முற்போக்கு, மதச்சார்பின்மை, இடதுசாரி எண்ணம் கொண்ட கட்சிகள் வெல்லப் போகிறார்களா அல்லது மதவாதிகள் வெல்லப் போகிறார்களா என்பதற்கான விடைதான் இந்தத் தேர்தல்!''
'' 'நன்றி உணர்வு இல்லாமல், கடந்த காலத்தில் நம்மைக் கைதூக்கிவிட்டவர்கள்  யார் என்று பாராமல் தி.மு.க. தோழர்கள் மீது காங்கிரஸார் நடவடிக்கை எடுத்ததால் இப்போது அனுபவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் மனம் வருந்தினால் மறுபடியும் போனால்போகிறது என்று காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம்’ என்கிறாரே கருணாநிதி!?''
''இதில் மனம் வருந்த என்ன இருக்கிறது? ஸ்டாலின் அவர்கள் இல்லத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒரு வாகனத்தைத் தேடி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்குச் சென்றார்கள். தகவல் கிடைத்த உடனேயே நான் அதைப் பகிரங்கமாகக் கண்டித்தேன். பின்னர் தி.மு.க-வுடனான கூட்டணி முறிந்து, அவர்கள் விலகிய பிறகு வந்த மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க-வும் தி.மு.க-வும் மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு கேட்டு எங்களை அணுகினார்கள்.
எங்களின் ஐந்து எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க-வை ஆதரித்து கனிமொழியை மாநிலங்களவை எம்.பி. ஆக்கினோம். இத்தனைக்கும் மத்திய அரசை தி.மு.க. விமர்சிக்கத் தொடங்கிய பிறகும்  அதைச் செய்தோம். ஆகவே, 'நன்றி மறந்த செயல்’ என்று எதையும் சொல்ல முடியாது.  அவர் சில வழக்குகளை மனதில் வைத்துச் சொல்கிறார். அந்த வழக்குகளை காங்கிரஸ் கட்சி போடவில்லை. வழக்குத் தொடுப்பது அரசியல் கட்சியின் வேலை அல்ல. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வது காவல் துறை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் வேலை. குற்றம் நிரூபிக்கப்படுவதும், நிரூபணம் ஆகாமல் போவதும் வழக்கறிஞரின் வாதத் திறமை. இறுதித் தீர்ப்பு எழுதவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.''
''மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மாநில அரசுகளைத்தானே பாதிக்கின்றன?''
''இது ஓர் அரசியல் தந்திரம். 'எல்லா பிரச்னைகளுக்கும் மத்திய அரசு மீது பழி போடு’ என்று மாநில அரசுகள் கற்றுக்கொடுத்த தந்திரம். பதுக்கல்காரர்கள், கறுப்புப் பணக்காரர்கள் மீது மாநில அரசுகள் சரிவர நடவடிக்கை எடுத்தாலே விலைவாசி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுமே! அதில் மாநில அரசின் உரிமைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்களா? விஜயகாந்த்கூட, 'பா.ஜ.க. ஆட்சியில் 40 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இப்போது 80 ரூபாய் ஆகிவிட்டது’ என்று அறியாமையில் பேசுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு,  32 டாலர் மட்டுமே இருந்தது. அது கடந்த ஐந்து ஆண்டுகளில் 105 டாலராக உயர்ந்து நிற்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் விலை உயராதா? இதுகூடத் தெரியாமல் அறியாமையில் பேசுபவர்களை என்ன செய்ய முடியும்? மன்னித்துவிட வேண்டியதுதான்!''
''அனைத்து கூட்டங்களிலும் உங்கள் மீது விமர்சனக் கணைகளை அடுக்குகிறாரே ஜெயலலிதா. அவருக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''
''செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு  எல்லோருமே எதிரிகள்தான். எம்.ஜி.ஆர்.  தொடங்கி கலைஞர், வைகோ, விஜயகாந்த், சோனியா காந்தி... என எல்லோரும் அவருக்குப் பகைவர்கள்தான். அண்மையில் அவருக்குப் பகைவரானவர் தா.பாண்டியன். எம்.ஜி.ஆர். தொடங்கி தா.பாண்டியன் வரை அனைவரையுமே பகைவராகக் கருதும் ஜெயலலிதா, என்னை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்? எனக்கு அவருடன் நேரடிப் பழக்கமும் கிடையாது; பகையும் கிடையாது!''
''2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் சமயம், விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததா?''  
''விடுதலைப் புலிகள் என்னை  நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், புலிகளோடு  தொடர்புடைய ஒரு சிலர் மூலமாக சில செய்திகளைப் பரிமாறிக்கொண்டார்கள். 'இலங்கை அரசுடனான இறுதிப் போரின் முடிவு, புலிகளுக்குச் சாதகமாக அமையாது. பலரும் உயிரிழப்பார்கள். ஆகவே, இலங்கை அரசும் புலிகளும் ஒரே நேரத்தில் போர்நிறுத்தம் அறிவிக்க வேண்டும். அதற்கு புலிகள் தயாராக இருந்தால் நாங்கள் இலங்கை அரசை வற்புறுத்துகிறோம்’ என்று தகவல் சொன்னோம். 'குறிப்பிட்ட ஒரு தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் போர்நிறுத்தம் அறிவிப்பீர்களா?’ என்று புலிகள் தரப்பில் கேட்டோம். அதற்கு அவர்களிடம் இருந்தோ, அவர்கள் ஆதரவாளர்களிடம் இருந்தோ எந்தப் பதிலும் வரவில்லை!''
''இப்போதும்கூட  ஈழத் தமிழர் விவாகரத்தில் எழும் சர்வதேச அழுத்தங்களை மட்டுப்படுத்தி இலங்கையை இந்திய அரசுதான் பாதுகாக்கிறது என்கிறார்களே! அதற்கு ஏற்றாற்போல் இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லையே?''
''2012-13 ஆண்டு தீர்மானங்களை ஆதரித்தோம். இப்போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் சில வாசகங்களை மாற்றி திருத்தங்கள் செய்த காரணத்தால் ஆதரிக்கவில்லை என வெளியுறவுத் துறை கூறுகிறது. ஆனால், ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவு, மத்திய அமைச்சரவையின் முடிவு அல்ல; அது வெளியுறவுத் துறையின் முடிவு!''
''வறுமையை வரையறுக்கும் திட்டக் கமிஷனின் அளவீட்டில் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் 33 ரூபாயும், கிராமப்புறத்தில் உள்ளவர்கள் 27 ரூபாயும் செலவு செய்யும் திராணி இருந்தால், அவர்கள் ஏழைகள் அல்லர் என்று வரையறுக்கப்பட்டது. அது, நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் உத்திதானே?''
''திட்டக் கமிஷன், செயல்படுத்தும் திட்டங்களுக்குப் பல அளவுகோல்கள் வைத்துள்ளது. அப்படியான ஒரு மெட்ரிக் அளவுகோல் அது. பொருளாதார மேதையான டெண்டுல்கர் திட்டக் கமிஷனுக்கான சில பொருளாதார அளவுகோல்களை உருவாக்க, தனி நபரின் வருவாயை அளவிட்டார். அதன்படி 33 ரூபாய் செலவு என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அது எல்லாவற்றுக் குமான அளவுகோல் அல்ல. சமையல் எரிவாயு மானியங்களுக்கோ, முதியோர் பென்ஷன், கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவித் திட்டம் போன்றவற்றுக்கு அது பொருந்தாது. ஆக, தவறான அளவுகோல்கள் மூலம் ஏழைகளைக் குறைத்துக்காட்டுகிறோம் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு!''
''ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மூவரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு  மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறதே?''
''அந்தத் தீர்ப்பை எதிர்த்தோ, மறுத்தோ அரசு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இப்போது நடக்கும் விவாதம் வேறு. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையா அல்லது ஆயுள் தண்ட னையின் காலத்தைக் குறைப்பதா? ஆயுள் கைதிகளை விடுவிக்கலாம் என்றால், அது மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ளதா... மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளதா..? இப்படியான விவாதங்கள், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது நான் இதில் என்ன சொல்ல முடியும்?''
''தனிப்பட்ட முறையில் தூக்குத் தண்டனை பற்றி உங்கள் கருத்து என்ன?''
''கேப்பிட்டல் பனிஷ்மென்ட் என்று சொல்லக்கூடிய மரண தண்டனைக்கு நான் எதிரானவன். ஆனால், உள்துறை அமைச்சராக  நான் இருந்தபோது, நாட்டில் அமலில் இருக்கும் சட்டம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யவேண்டிய கடமை எனக்கு உள்ளது!''

ad

ad