புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2014

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் இன்று சுதாகரன் நேரில் ஆஜரானார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்  மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் 7 மாதத்திற்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா முன்னிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தை அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் தொடங்கினார்.

அதன்பின், வாதத்தின் 3வது நாள் அரசு வழக்கறிஞர் பவானி சிங், "சென்னை தி.நகரில் ரூ.90 லட்சத்திற்கு சுதாகரன் நிலம் வாங்கியுள்ளார். கடலூரில் ரூ.30 லட்சத்திற்கு ரசாயன ஆலையையும் அவர் வாங்கி உள்ளார். மேலும், 1,167 ஏக்கர் நிலம் சுதாகரனின் ரிவர் வேர் அக்ரோ பார்ம் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனிடையே இந்த வழக்கில் இன்று ஜெயலலிதா ஆஜராக விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், aசசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் நேரில் ஆஜராக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று சுதாகரன் மட்டும் நேரில் ஆஜரானார்.
சசிகலா மற்றும் இளவரசி சார்பில் வருகின்ற திங்கட்கிழமை நேரில் ஆஜராவதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
உடல்நிலை சரியில்லை என்பதால் சசிகலா ஆஜராகவில்லை என சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி குன்கா, ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கண்டிப்பாக வரும் 7ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்

ad

ad