உண்மையா? இல்லையா? நானும் இப்போது கேட்கிறேன்! சிவங்கையில் மு.க.ஸ்டாலின்!
பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசும் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா?
சட்டமன்றத் தேர்தலின் போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் புத்தக சுமையை குறைப்பேன் என ஜெயலலிதா கூறினார். ஆனால் சமச்சீர் கல்வி முறையை ரத்து செய்தார். இது உண்மையா, இல்லையா.
குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லா அரிசியை வழங்குவேன் என்றார். தற்போது விலை போகாதா அரிசியை வழங்குகிறார். இது உண்மையா, இல்லையா.
58 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவேன் என்றார். ஆனால் வழங்கவில்லை, இது உண்மையா, இல்லையா.
கடந்த 6 மாதங்களாக முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இது உண்மையா இல்லையா,
1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில் ஜெயலலிதா சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்றார். தற்போது வேண்டாம் எனக் கூறுகிறார். சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என சொன்னது உண்மையா, இல்லையா.
ராமர் கோவிலுக்காக கரசேவையை ஜெயலலிதா ஆதரித்தார் என்பது உண்மையா, இல்லையா, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக ரூ.636 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியது திமுக. ஆனால் ஜெயலலிதா தான் இத்திட்டத்தைக் கொண்டுவந்ததாகக் கூறுகிறார். திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக தான் என்பது உண்மையா, இல்லையா. இலவச கேபிள் டிவி இணைப்பு தருவேன் எனக் கூறிவிட்டு தற்போது ரூ.120 அதிமுக அரசு வசூல் செய்வது உண்மையா, இல்லையா.
பாஜகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டதன் காரணமாக தொகுதி பிரிப்பதில் பிரச்சனை என்பதால் கம்யூ.களை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது அதிமுக என்பது உண்மையா இல்லையா, வாஜ்பாய் அரசு காரணமாக இருந்தது அதிமுக என்பது உண்மையா, இல்லையா.
ஜெயலலிதா தனது பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகளை எப்படிக் கேட்டாலும், அதற்கு பதில் சொல்ல நான் தயார் என்றார்.