சனி, ஏப்ரல் 05, 2014

அமெரிக்க தீர்மானம் பிராந்திய நலனை அடிப்படையாக கொண்டது!- உலக தமிழர் பேரவை

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமையானது அவர்களின் பிராந்திய நலன் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டது என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட் தந்தை இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக செய்யவில்லை அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

எவ்வாறாயினும் இந்த தீர்மானம் ஊடாக தமிழ் மக்களுக்கு நிவாரணம் ஒன்று கிடைக்கும் என்பது இரகசியமானதல்ல எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
உலக தமிழர் பேரவை உட்பட புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இலங்கை சேர்த்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அருட் தந்தை இம்மானுவேல் உட்பட தடைசெய்யப்பட்ட 424 நபர்கள் மற்றும் அமைப்புகள் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை அருட் தந்தை இம்மானுவேல் மறுத்துள்ளார்.