புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014


ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்பிய அரசாங்கம், முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தது?
இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் 26வது மனித உரிமைகள் மாநாட்டில், ஒதுக்கப்படுதல் மற்றும் இனப்பாடுகளுக்கு எதிராக சர்வதேச அமைப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் நிர்மலா பெர்ணாண்டோவின் இந்த அறிக்கையை, அதன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இன்று மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பித்திருந்தார்.
இதில்,  ரத்துபஸ்வெலயில் சுத்தமான குடிநீர் கேட்ட போராட்டம் நடத்திய பொது மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் அவசர அவசரமாக இராணுவத்தினரை ஈடுபடுத்தியது.
அத்துடன் இராணுவம் பொது மக்கள் மீது தாக்குதலை நடத்தி சிலரை கொலையும் செய்தது.
ஆனால் அளுத்கம,  பேருவளை மற்றும் தர்காநகரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதிகள் தாக்குதல் நடத்திய வேளையில் ஏன் இலங்கை அரசாங்கம் இராணுவத்தை ஈடுபடுத்தி தாக்குதல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த துணியவில்லை?
பொதுபல சேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு வெளிப்படையாக முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஆனால் இந்த அமைப்புடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட பல அதிகாரிகள் நேரடி தொடர்புகளை பேணி வருகின்றனர்.
இது மிகவும் கண்டனத்துக்கு உரிய விடயம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad