புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014


பிரபாகரன் இருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.தர்காநகரில் முஸ்லிம் பெண் . வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின்
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
ஜனநாயக மக்கள் முன்னணி தகவல் தொடர்பு மையம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.உறுப்பினர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தனர்.
அமைச்சர் ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தில் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டிருந்ததுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டினூடாகவே இலங்கையில் அமைதியும் உரிமையுடன் கூடிய வாழ்வு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாத்தியப்படும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு கண்டனக் குரலை வெளியிட்ட வடமகாணசபை உறுப்பினர் அஸ்மின்
எமக்குள் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் மனிதர்கள் என்ற புள்ளியிலே நாம் இன்று ஒன்றாகி இருக்கின்றோம்.இந்த தமிழ் சகோதரர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இது நல்ல முன்னுதாரணம் தமிழர்களின் போராட்டம் இன்றுவரை நின்று நிலைக்கின்ற தென்றால் அதற்கு ஒரு நியாயம் இருந்தது என்பதை நான் இங்கு கூற விரும்புகின்றேன்.நான் வன்முறைகள் நடந்த தர்க்கா நகர் பேருவளைக்கு சென்ற போது அங்கு முஸ்லிம் தாய் என்னை பார்த்து கேட்டார் பிரபாகரன் எங்கே என்று கேட்டார் .நான் அவரை பார்த்து ஏன் என்று கேட்டேன் அதற்கு அந்த முஸ்லிம் தாய் சொன்னார் பிரபாகரன் இருந்திருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது என்று அஸ்மின் உணர்ச்சி பொங்கக் கூறினார்.
முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்கக்கூடாது- எம்.எம்.நிவாகீர்
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தகவல் வழிகாட்டல் மையத்தின் செயலாளர் நிவாகீர் கருத்து வெளியிடுகையில்
எமது மக்களுக்கு எதிராக அரச கைக்கூலிப்படைகளின் அனுசரணையோடு பொது பல சேனா அரங்கேற்றிய காடைத்தனங்களால்.எமது உயிர் உடமைகள் பொருளாதாரம் அழிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தகைய கொடுமைகள் அரசாங்கத்தின் துணையோடுதான் நடத்தப்பட்டிருக்கின்றது. குற்றவாளியான பொது பலசேனாவின் ஞானசார தேரரை இன்னும் கைது செய்யவில்லை. உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும். முஸ்லிம் சமுதாயம் எப்போதும் பொறுமை காக்காது. நாம் பொறுமை இழந்தால் தாங்கமாட்டீர்கள். நாம் எமது உயிரை அல்லாவின் பாதத்தில் எப்போதும் கொடுக்க தயங்காதவர்கள். எமக்கு ஒரு புனிதமான மார்க்கம் உண்டு. அதன் படிதான் நாம் ஒழுகுகின்றோம். எனவே எமது பொருளாதாரத்தை வாழ்க்கையை சீரழிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
வடக்கு கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு தீர்வை நோக்கி செல்வதே ஒரே வழி-பா.உறுப்பினர் சி.சிறீதரன்
அன்று 56களில் சிங்கள காவல்துறை பார்த்திருக்க சிங்கள காடையர்களால் பெரும் வன்முறைகள் நடத்தப்பட்டதோ இன்று அது முஸ்லிம்கள் மீது அரங்கேற்றப்பட்டுள்ளது.
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வடக்குக் கிழக்கில் ஒரு தீர்விற்காக பயணிக்க வேண்டிய காலத்தை சிங்கள பேரினவாதம் எம்மிடம் தந்திருக்கின்றது. அன்று தந்தை செல்வா தன் பாசறையில் வளர்ந்த முஸ்லிம் பெரும் தலைவர் அஸ்ரப்பிடம் அம்பாறையை மையமாக வைத்து ஒரு முஸ்லிம் உலகை உருவாக்க நினைத்தார்.
இன்று அந்த நோக்கத்தின் தேவையை உணரமுடிகின்றது .மொழியால் ஒன்றுபட்ட எம்மை இலங்கையில் பௌத்த பேரினவாதம் அழித்தொழிக்க முனைகின்றது என தெரிவித்தார்.
கௌதம புத்தர் இன்றிருந்தால் பௌத்த இனவாதிகள் அவருக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள் - அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
கௌதம புத்தர் அன்பையும் கருணையையும் போதித்தவர். ஆனால், அவரது பெயரால் காவியுடை தரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக இவர்கள் சக பிக்கு ஒருவரையே சவரஅலகால் படுகாயப்படுத்தியதோடு, ஆணுறுப்பையும் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்கள்.
கௌதம புத்தர் இன்றிருந்தால் பௌத்த இனவாதிகள் அவருக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தென்பகுதி முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமைவகித்து உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - அளுத்கம, பேருவளை, தர்கா நகரில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்களாகக் காட்டுவதற்கே அரசு முயற்சிக்கின்றது.
ஆனால் இனம், மதம் மற்றும் பண்பாட்டுப் பல்வகைமையை நிராகரித்து ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றுகின்ற அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின் ஒருபகுதியே முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.
இப்படித்தான் தமிழர்கள் மீது காலத்துக்குக் காலம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடைசியில் இன அழிப்புப் போராகவே உருவெடுத்தது. ஆட்சியாளர்கள் சிங்கள மக்களிடையே பேரினவாதத்தை ஊட்டுவதன் மூலமே தங்கள் ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க விரும்புகிறார்கள். விடுதலைப்புலிகள் இருக்கும் வரையில் அவர்களைக் காட்டிக் காட்டி இனவாதம் வளர்த்த பேரினவாதத்தின் கவனம் இப்போது முஸ்லிம் மக்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் சிலர், பிரபாகரன் இருந்திருந்தால் தங்கள் மீது இப்படியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் மீது காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்டுவந்த பேரினவாத ஒடுக்குமுறைகள்தான் பிரபாகரன் என்ற ஆளுமையின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தது. அதேபோன்று, முஸ்லிம்கள் மீதான இனரீதியான ஒடுக்குமுறைகளும், அழிப்புகளும் தொடருமாக இருந்தால் முஸ்லிம்களின் மத்தியில் இருந்தும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின், இன அழிப்பின் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள். அந்தவகையில், முஸ்லிம் சகோதரர்கள் மீதான பேரினவாதத் தாக்குதல்களின் வலியை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். அதனால்தான், முஸ்லிம் மக்கள் மீதான இனரீதியான தாக்குதல்களைக் கண்டிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கிறோம்.
முஸ்லிம்; அரசியல் தலைவர்களது சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் தகிடுதத்தங்கள் பற்றிப் பேசுவதற்கு இது தருணம் இல்லை. அப்பாவி முஸ்லிம் பொதுமக்களுக்கு எந்தவித நிபந்தனையும் அற்ற எங்கள் ஆதரவை நாம் வழங்குவோம்.
முஸ்லிம் மக்களும் நாங்களும் மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். தமிழ்பேசும் மக்களாக பேரினவாதத்துக்கு எதிராக நாங்கள் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.
அளுத்கம வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து, யாழில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்!
கொழும்பு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன.
அளுத்கம, பேருவளை பகுதிகளில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு அளுத்கம வன்முறைச் சம்பவத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்திருந்தது.
இதற்கமைவாக இன்று யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரையில் குறித்த போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது
உடைக்காதே உடைக்காதே வழிபாட்டு தலங்களை உடைக்காதே,
நேற்று தமிழின அழிப்பு இன்று முஸ்லிம்கள் அழிப்பா?
முஸ்லிம் அமைச்சர்களே! இன்னுமா அரசாங்கத்துடன் சல்லாபம்?
முஸ்லிம்களின் பெருளாதாரத்தை நசுக்காதே.
அரசே உன் நரபலிக்கு முஸ்லிம் பாலகனும் வேண்டுமா?
சிறீலங்கா இராணுவமே முஸ்லிம் பிரதேசங்களை விட்டு வெளியேறு,
போன்ற கோஷங்களை பதாகைகளாக எழுதிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் முஸ்லிம் தமிழ் இனங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில் நான் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அளுத்கம பகுதிக்குச் சென்று அங்கே இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்தேன்.
அப்போது என்னை நோக்கி ஓடி வந்த முஸ்லிம் தாய் ஒருவர் என் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பிரபாகரன் எங்கே? அவர் இருந்திருந்தால் நாங்கள் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோமே? அவர் எங்கே என என்னைக் கேட்டது என்னை மிக உருக்கியது.
தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய அந்த உணர்ச்சிப் பெருக்கு மிக்க போராட்ட உணர்வு எவ்வாறு முஸ்லிம் மக்களையும் காவாந்து பண்ணியிருக்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என கூறினார்.

ad

ad