புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014

கடும்போக்காளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் முஸ்லிம் சபை கோரிக்கை
 இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் கடும்போக்காளர்களுக்கு

 தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லிம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம்  இந்தக்கோரிக்கையை முஸ்லிம் சபை விடுத்துள்ளது.
 
கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்தக்கோரிக்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும்
 தாக்குதல்களால் முஸ்லிம்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதேவேளை அளுத்கமை சம்பவத்தின் பின்னர் அது தொடர்பில் எவரும் பேரணிகளை நடத்தி பிரச்சினையை 
பெரிதாக்கக்கூடாது என்று முஸ்லிம் சபை கேட்டுள்ளது.
 
பொதுபல சேனா சிஹல ராவய மற்றும் ராவணா பலய ஆகிய அமைப்புக்களின் செயற்பாடுகளினால் அளுத்கமை 
மற்றும் பேருவளையில் பாரிய வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
 
எனவே முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப கடும்போக்காளர்களுக்கு ஜனாதிபதி தடை விதிக்க
 வேண்டும் என்று முஸ்லிம் சபை கோரியுள்ளது.

ad

ad