புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014

சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்- பான் கீ மூன் 
 சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆக்கபூர்வமாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின்

 செயலாளர் நாயகம் பேன் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்காக குழுவொன்று இங்கு விஜயம் மேற்கொள்ளக் கூடாது
 என பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  பிரேரணை தொடர்பில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாட்டினுள் சர்வதேச விசாரணைகள் 
முன்னெடுக்கப்படுவதை தடுப்பதற்கான பிரேரணை 134 மேலதிக வாக்குளால் பாராளுமன்றத்தில் நேற்று 
நிறைவேற்றப்பட்டது.
 
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையின் பொறுப்புக்கூறல் 
மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள
 தலைமைத்துவத்தை வரவேற்பதுடன்  ஐ.நா செயலாளர் நாயகம் மனித உரிமை ஆணையாளருக்கு பூரண
 ஒத்துழைப்பு வழங்குகிறார். 
 
போரின் பின்னரான சவால்கள் தொடர்பிலும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் நன்கு அறிந்துள்ளார்.  
எனவே சர்வதேச சமூகத்துடன் செயற்திறனாக ஒன்றிணைந்து செயற்படுவற்கு அவர் இலங்கையை 
உற்சாகமூட்டுகிறார்.
 
 மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பிலான உள்ளக ரீதியிலான செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதன் மூலம்
  நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
 
ஒருசில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் 
நாயகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஐநா செயலாளர் நாயகத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் 
 தெரிவித்தார்.
 
'இலங்கையின் தென் பகுதிகளில் அண்மையில் பதிவான சம்பவங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் அவதானம்
 செலுத்தியுள்ளார்.  மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அவர் 
மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.  இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற 
துன்புறுத்தல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக ரீதியில் விசாரணைகளை மேற்கொண்டு 
மீண்டும் அவ்வாறு இடம்பெறாதவகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும். 
 
இவ்வாறான சம்பவங்கள் உக்கிரமடைவதற்கு இடமளிக்க கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.  அந்த சம்பவம் 
தொடர்பில் உடனடியாக விசாரணைகைளை மேற்கொண்டு இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு
 ஐ.நா செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.'

ad

ad