புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014


இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை :கல்வீச்சு - தடியடி
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்ப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது40) குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்ட
இந்து முன்னணி தலைவராக இருந்து வருகிறார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை டிடிஎச் சாலையில் இவரது அலுவலகம் உள்ளது.  அதில் டெலிபோன் பூத்தும் செயல்பட்டு வருகிறது.  நேற்று இரவு 10.30 மணியளவில் தனது அலுவலகத்தை சுரேஷ்குமார் மூடிக்கொண்டிருந்தார்.   அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.   திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினர்.   இதில் அவருக்கு தலை,கை,கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது.   படுகாயங் களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுரேஷ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் மண்ணூர் பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக இல.கணேசன் உட்பட ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.  சுரேஷ்குமாரின் மனைவியும் குழந்தைகளும் கதறி அழுத காட்சி எல்லோரையும் கண் கலங்க வைத்தது.
சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடந்தது.   இதற்கிடையே அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.  அப்போது பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.  போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.  
கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து மண்ணூர்பேட்டைக்கு உடல் எடுத்துச் செல்லப்படும்போது போலீசார் சொன்ன பாதையில் செல்லாமல் சென்றதால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.  பின்னர் போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர்.

ad

ad