புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014



சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன் என்ற தனியார் மருத் துவக் கல்லூரியில் வெளிமாநி லங்கள் மற்றும் வெளிநாடு களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். மலேசிய நாட் டைச் சேர்ந்த வெண்டியங் கூல்லிங் (வயது-19), பிரிண் டாலு (வயது-19) என்ற இரு மாணவிகள் 2-ஆம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

ஒரு சனிக்கிழமை மதியம் மாணவிகள் இருவரும் சேலத் திற்கு சென்று வருவதாக விடுதி கண்காணிப்பாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால், இரவு வரை இருவரும் விடுதிக்கு திரும்பவில்லை. மொபைலும் சுவிட்ச் ஆஃப்.

ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடி யாக வயர்லஸ் மூலமாக மாவட்டம் முழுவதுமுள்ள காவல்நிலையங்களுக்கு வெளிநாட்டு மாணவிகள் காணாதது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் வெளிநாட்டு மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து சரக டி.ஐ.ஜி. அமல் ராஜுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவிகளின் செல்பேசி இருக்கும் இடம் குறித்து போலீஸார் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் டவரை கண்காணித்ததில், அவர்கள் மாமாங்கம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் விசாரணை மேற் கொண்ட போது, பார்க் பிளாசா என்ற ஒரு நட்சத்திர விடுதியில் இரு மாணவிகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் நகர காவல் துறையினர் பெண் காவலர்களுடன் சென்று பார்த்த போது, போதை குறை யாமல் அரைகுறை ஆடையில் அவர்கள் இருந்துள்ளனர்.

மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ஹோட்டலுக்கு வந்ததாகவும் தங்களை யாரும் கடத்தவில்லை என்றும் கூறியதாக போலீசார் சொல்லி வழக்கை முடித்துக் கொண்டனர். ஆனால், குறிப்பிட்ட இந்த மூன்று நட்சத்திர தங்கும் விடுதி உள்ளிட்ட இன்னும் மூன்று விடுதிகளில் பெண் களுக்கு மட்டும் சரக்கு இலவசம் என்ற நடைமுறை வைத்துள்ளனர். அதனால், நேபால், கென்யா, மலேசியா போன்ற வெளிநாட்டு மாணவிகளும், கேரளா, மணிப்பூர், மேகாலயா போன்ற உள்நாட்டு மாணவி களும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நிறையபேர் வருகிறார்கள்.

""அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சரக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களிடமிருந்து தேவையானதை இந்த விடுதியினர் கறந்துவிடுகின்றனர். இதற்காக எங்க உயர் அதிகாரிகளுக்கு மாமூல் தவறாமல் கொடுத்து விடுகிறார்கள்'' என்றனர் ரைடுக்கு போன சில காக்கிகள்.

ad

ad