புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014





""கொடநாட்டு பங்களா வேலையாட் களான எங்களை வேலை யை விட்டுத் துரத்த நினைக்கும் பங்களா தரப்பிடம் இருந்து உங் கள் மக்களாகிய எங்க ளைக் காப்பாற்றுங்கள்.

கொடநாட்டில் கண்ணில் படும் இந்திக் காரர்களை அடித்து விரட்டுங்கள். ஒரு தமிழன் உதவி கேட்டு வந்தால் உதவி செய்யுங்கள். நீங் கள் இருக்கும்வரை எங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று தெரியப்படுத்துங்கள்''

-இப்படிக்கு

ஒரு கொடநாட்டு தொழிலாளி.

இப்படியொரு கண்ணீர்க் கடிதம் ஒன்று நமக்கு கொடநாட்டிலிருந்து வந்துசேர... கொடநாடு தொழிலாளர்களை சந்தித்துப் பேசினோம்.

புகைப்படத்தைத் தவிர்த்துவிட்டுப் பேசியவர்களோ, ""கொடநாடு எஸ்டேட்டுக்குள்ளயும், கர்ஸன் எஸ்டேட்டுக்குள்ளயும் சேர்த்து 2000 பேருக்கு மேல வேலை செய்யறோம்ங்க. அதுல 100 பேர் இந்திக்காரங்க வேலை செஞ்சுக்கிட்டிருக்காங்க. ஷிப்ட்டுக்கு 224 ரூபாய்ங்க. இங்கே வேலை செய்யற நாங்கள்லாம் கேரடாமட்டம், ஈளாடா, ஓம் நகர், கைகாட்டி, கோத்தகிரிப் பகுதிகளைச் சேர்ந்தவங்க.

கடந்த பாராளுமன்ற எலெக்ஷன்ல இந்தப் பகுதிகள்ல அ.தி.மு.க.வுக்கு ஓட்டுக்கள் குறைஞ்சிருச்சாம். அதனால "இங்கே வேலை செய்யற ஆளுக நீங்க யாருமே அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடலை, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணப் பார்க்கறீங்களா?'ன்னு சத்தம் போட்ட பங்களா மேனேஜர் நடராஜன், "உங்களையெல்லாம் தூக்கிட்டு ஒரிசாவிலிருந்து ஆட்களை வரவைக்கறேன்'னு மெரட்டறாருங்க. அதுக்கான ஏற்பாடுகளையும் தீவிரமா செய்யறாருங்க. அதிலும் "ஏண்டா சிலோன்காரனுங்க நீங்க, அம்மாகிட்ட வாங்கி சாப்பிட்டுட்டு கருணாநிதிக்கு விசுவாசமா இருக்கறீங்களா? உங்களைத்தாண்டா மொதல்ல விரட்டணும்'னு சொல்றாரு. இப்போ அண்ணா தேயிலைத் தோட்ட தொழிற்சங்கத்துக்காரர்களோட நிர்வாகிகள்கிட்ட, எங்களைப் பற்றி கணக்கெடுக்கச் சொன்னதோட அதுல பெர்மனெண்ட் ஆனவங்க லிஸ்ட்டை முதல்ல எடுக்கச் சொல்லி கணக்கை முடிக்கப் பார்க்கறாருங்க மேனேஜர் நடராஜன்.

சிலோன்ல இருக்கற தமிழ்க்காரங்களுக்காக, தான் போராடிக்கிட்டிருக் கிறதா சொல்ற முதலமைச்சர் அம்மா, அவுங்க பங்களாவுக்குள்ள வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற எங்களைத் துரத்துறது என்னங்க நியாயம்?

தமிழர்களை வெளியேற்றி, இந்திக்காரங்களோட இடமா முதலமைச்சர் அம்மா இந்த மலையை ஆக்க நினைக்கிறதை இந்த நீலகிரி மக்கள் சேர்ந்து தடுத்து நிறுத்துங்க. அப்படித் தடுத்து நிறுத்தலைன்னா பனிமலையா இருக்கற இந்த நீலகிரி மலை 2000 குடும்பத்து உடல்களைத் தின்னும் பிண மலையாத்தான் இருக்கும்...'' என்கிறார்கள் கண்ணீர்க் கசிய பெருங்குரலில்.

ad

ad