அரசியல்
வட்டாரத்தில் எல்லா சர்ச்சைகள் பற்றியும் சர்வ சாதாரணமாகப்
பேசப்படுவதில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அமைச்சர் சண்முகநாதனைப் பற்றி,
தூத்துக்குடியில் சில மாதங்களாகவே ‘ஒரு’ செய்தி, ஒரே மாதிரியாகப்
பேசப்பட்டு வருகிறது.
என்ன?
அந்தக்
கடிதத்தில், ""ஆண்களுக்கு பெண்களைக் கொண்டும், பெண்களுக்கு ஆண்களைக்
கொண்டும் பேஷியல், பெடி க்யூர், ஹெட் மசாஜ் மற்றும் பாடி மசாஜ் ஆகியவற்றைச்
செய்கிறார்கள். பணத்திற்காக வெளி மாநில பெண்களைக் கொண்டு பாடி மசாஜ் என்ற
பெயரில் தவறு செய்கின்றனர். பணத்திற்கு ஏற்றாற்போல், முதலில் பிரபல
பிளாசாவில் உள்ள பதுங்கு அறையிலும், பின் தூத்துக்குடி புறச்சாலையிலுள்ள
ஒரு ரிசார்ட்டில் அறை எடுத்து மசாஜ் பெயரில் தவறை அரங்கேற்றி வருகின்றனர்,
தூத்துக்குடியில் உள்ள அந்த ஸ்டைல் கேச்சர்ஸ் அழகு நிறுவனத்தார். இந்த
நிறுவனத் தால் மாநகரின் கலாச்சாரமே சீரழியத் தொடங்கிவிட்டது. மேற்படி
கடைக்கு முக்கிய அரசியல்வாதிகளும், தொழி லதிபர்களும் வாடிக்கையாளர் களாக
உள்ளதால், காவல்துறை கண்டும்காணாமல் விட்டுள்ளது கேள்விக்குறியாக உள்ளது''
என்று விவரங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.
முன்னர்,
தூத்துக்குடிக்கு புகழையும் வருமானத்தையும் ஈட்டி தந்த துறைமுகத்தின்
மூலமே, கெட்ட பெயரும் ஏற் பட்டுள்ளது. கண்டெய்னர் பணி யாளர் முதல்
கார்ப்பரேட் நிறுவன அதிகாரிவரை இங்கு வந்துபோகும் வெளியூர்க் காரர்கள்
சபலபுத்தியால் தடு மாறி, இருந்த எல்லா பணத் தையும் இழந்து போகுமளவிற்கு
தொழில் இங்கு கொடிகட்டிப் பறக்கிறது. அவ்வப்போது நடக் கும் போலீசாரின்
அதிரடிகளால் கொஞ்சகாலம் காணாமல் போவதும் உண்டு. ஆனால், இப்பொழுது மசாஜ்
சென்டர் என்ற பெயரில் நடைபெறும் ஹைடெக் தொழிலால், முத்து நகரின் பெயருக்கு
கூடுதல் அவப்பெயர் உண்டாகிவிடுமோ என ஆதங்கப்படுகிறார்கள், ஊர்நலன்
விரும்பிகள். இந்த நிலையில்தான், இந்த விவகாரம் எழுந்துள்ளது.
மசாஜ்
மையத்துக்குச் சென்றுவந்த பலரையும் சந்தித்துப் பேசினோம். மிகுந்த
தயக்கத்துக்குப் பின்னர் நம்மிடம் பேசினார், வழக்குரைஞர் நண்பர் ஒருவர்.
""முடிவெட்டுறதுக்காக டி.எஸ்.எஃப். கிராண்ட் பிளாசா ஓட்டல்ல இருக்கிற அபி
ஸ்டைல் கேச்சர்சுக்குப் போனேன். அங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி
யான அறைகள் இருந்துச்சு. எனக்கு ஆண்கள்தான் முடிவெட்டி, சேவிங்க்
செய்தாங்க. பிறகு அங்க இருந்த சோஃபியாங்கிற லேடி என்கிட்ட வந்து, ""சார்
ஹெட்மசாஜ்'' என கொஞ்சும் குரலில் கேட்டாங்க. கேட்ட குரலிலேயே கிறுகிறுத்து,
தலையை ஆட்டிட்டேன். ஹெட்மசாஜ் பண் ணிட்டு இருந்தப்போ, அந்த அறையின்
மூலையிலுள்ள உள் அறையியிருந்து ஒருத்தர் வெளியில வந்தார். கேட்டதுக்கு,
"அது முழு பாடி மசாஜ்; அதுக்கு இங்கே என்றால் ரூ.4500 ஆகும். வெளியில்
சத்யா ரிசார்ட்டில் இருக்குற நம்ம பிராஞ்ச் என்றால், ரூ.4500 பிளஸ் ரூம்
வாடகை, மசாஜ் செய்யும் பெண்ணுக்கு டிப்ஸ் கொடுக்கணும். அதிகபட்சம்
இரண்டுமணி நேரம்தான் இருக்க முடியும்'னு அழுத்தமா இன்னொரு பொண்ணு பதில்
சொன்னது. ஆடிப்போயிட்டேன். அத்தோட வெளியில வந்தவன் நான். மசாஜுங்கிற பேர்ல
தப்பு பண்றத சகிச்சிக்க முடியாமத்தான் இந்த போலீசுக்குப் புகார்
அனுப்பினேன்'' என்றவர்...
""சார்...
ஏதோ அங்க போய் பார்க்கக் கூடாததையும் கேட்கக்கூடாததையும் பார்த்துட்டேன்,
கேட்டுட்டேன். இந்தாங்க ஒரிஜினல் புகார். தயவுசெய்து என் பெயரும்
போட்டோவும் வேண்டாம்... சார்'' என தன் நிலையில் பிடிவாதமாக இருந்தார்.
சர்ச்சைக்கு
உள்ளாகியிருக்கும் அபி ஸ்டைல் கேச்சர்ஸின் நிறுவனரான அபி காயத்ரி கேரளா
மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நான்கு வருடங்களுக்கு முன்
ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று தூத்துக்குடியில் மட்டும் ஐந்து
கிளைகளுடன் செயல்படுகிறது.
இதில்
ஆண்களுக்கென பிரத்யேக ஸ்பாவை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று அமைச்சர்
சண்முகநாதன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்; கடந்த தேர்தல்
பிரச்சாரத்தின்போது, அபி ஸ்டைல் கேச்சர்ஸ் அமைந்துள்ள டி.எஸ்.எஃப்.
கிராண்ட் பிளாஸாவிலேயே அறை எண் 302-ல் தங்கி, அவர் மசாஜ்
எடுத்துக்கொண்டார். சமீபகாலம்வரை அதைத் தொடர்ந்துகொண்டு வருகிறார்’’ என
மாவட்ட அ.தி.மு.க.வில் இந்த விவகாரம் அதிக பரபரப்புடன் பேசப்படுகிறது.
எதிர் கோஷ்டி யிலிருந்து கட்சித் தலைமை அலுவலகத்துக்கும் போயஸ்
தோட்டத்துக்கும் புகார்க் கடிதங்கள் பறந்துவருகின்றன.
அந்த அளவுக்கு இதில் என்ன முக்கியத்துவம்?
2006-ஆம்
ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதியன்று, சென்னையில் ஒரு முடிதிருத்தகத்தைத்
திறந்துவைத்தார், அப்போதைய முதலமைச்சர் கலைஞர். அதைக் கிண்டலடித்து
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில்,
""இலக்கிய விழா, புத்தக வெளியீட்டு விழா, நடனங்கள், கேளிக் கைகள், ஐந்து
நட்சத்திர ஓட்டல் விருந்து ஆகியவற்றில் கலந்துகொள்வது, எல்லாவற்றுக்கும்
மேலாக மிகுந்த அக்கறையுடன் முடி திருத்தும் கடையைத் திறந்துவைப்பது ஆகிய
முக்கிய நாட்டுப் பணிகளைச் செய்துவருகிறார், கருணாநிதி. ஒரு முத லமைச்சர்
ஆற்றும் பணி, முடிதிருத்தும் கடையைத் திறந்துவைப்பது என்ற மிகப்பெரிய
முன்னுதாரணத்தை இந்திய நாட்டிற்கே இவர் ஏற்படுத்தியுள்ளார். காரணம்
கேட்டால், தனது குடும்பத்திற்கு அவர் மிகவும் வேண்டியவர் என்று சொல்கிறார்.
கடந்த 28-08-2006 அன்று மாலை 6 மணியளவில், தாரை, தப்பட்டை, மேளதாளங்கள்
முழங்க, அண்ணா சாலை ஜெமினி அருகே, போக்குவரத்தை அறவே நிறுத்தி,
ஸ்தம்பிக்கச் செய்து, மிக ஆடம்பரமாக கருணாநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சி எது
என்று பார்த்தால், அதுதான் தனது குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்ட
ஒருவருடைய முடிதிருத்தும் கடையைத் முனைப்புடன் இவர் திறந்து வைத்த
நிகழ்ச்சியாகும். என்னே தமிழர்களின் பாக்கியம்? முதல் அமைச்சராவது
முடிதிருத்தும் கடையைத் திறக்கும் முக்கிய நாட்டுப்பணிக்கு சென்றுவிட்டார்.
மற்றவர்கள்(அமைச்சர்கள்) எங்கே போனார்கள்? ஒருவேளை சவுரிமுடிக் கடையைத்
திறந்துவைக்கப் போனார்களோ?'' என்றெல்லாம் மிகவும் கடுமையான வாசகங்களைக்
கொட்டியிருந்தார், ஜெயலலிதா.
இயல்பாகவே
ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய இந்த அறிக்கையால், மாநிலம் முழுவதும்
மருத்துவர் சமுதாயத்தினர் மற்றும் சவரத் தொழில் செய்வோர் கடும்
அதிருப்தியும் மிகுந்த வேதனையும் அடைந்தனர். கண்டனத்தையும் வருத்தத்தையும்
தெரிவித்த அவர்கள், ஜெயலலிதா வருத்தம் தெரிவிக்காவிட்டால், தமிழகம்
முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார்கள்.
அப்போதைய
முதலமைச்சர் கலைஞரும், ""முடிதிருத்தும் கடை என்றால் ஜெயலலிதாவுக்கு
அவ்வளவு தாழ்வாகப் போய்விட்டதா? அவர்களும் தொழிலாளர் கள்தானே,
மனிதர்கள்தானே? அவர் களுடைய நிலையத்தை நான் திறந்துவைத் தது என்ன பெரிய
பாவமா?''’என்று பதிலுக்குக் கேட்க, ஜெயலலிதாவுக்கு நெருக்கடி உண்டானது.
நான்காவது
நாளில், முதல் அறிக்கைக்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளி யிட்ட ஜெயலலிதா,
""கருணாநிதி எத்தனை முடிதிருத்தும் நிலையங்களை வேண்டு மானால் இனி வரும்
நாட்களில் இதே வேலையாகக்கூட திறந்துவைக்கட்டும். இதேபோல மெக்கானிக்
ஷெட்டையோ வெல்டிங் கடையையோ அவர் திறப்பாரா?'' என்று விஷயத்தை வேறுபக்கம்
திருப்பினார்.
அந்தப்
பிரச்சினையை அவ்வளவு எளிதில் ஜெயலலிதா மறந்திருக்கமாட்டார் எனக் கூறும்
தூத்துக்குடி அ.தி.மு.க.வினர், அமைச்சர் தொடர்புபட்ட இந்த விவ காரத்தை
பரபரப்போடு கவனித்து வருகின்ற னர்.
பிரச்சினை
பற்றி அபி ஸ்டைல் கேச்சர்ஸின் நிறுவனரான அபி காயத்ரியிடம் கேட்டபொழுது,
""சலூன் மற்றும் ஸ்பாவை உள்ளடக்கியதுதான் எங்க நிறுவனம். எங்க நிறுவனத்தில்
மசாஜ் என்பதே கிடையாது'' என ஒரேயடியாக மறுத்தார் அவர்.
அமைச்சர்
சண்முகநாதனிடம் கேட்டதற்கு, ""தேர்தலின்போது அந்த ஓட்டலில் தங்கியது உண்மை
என்றாலும், என்னைப் பற்றிக் கூறப்படுவது வீண் வதந்தியே. சும்மாதான் அந்த
இடத்துக்குப் போனேன். மற்றபடி ஒன்றும் கிடையாது'' என்றார் அவர்.
2006
விவகாரத்தைச் சுட்டிக்காட்டும் சண்முகநாதனின் எதிர்ப்பாளர்கள், அவ ருடைய
அமைச்சர் பதவிக்கு ஆபத்து வரவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.