புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று இங்கிலாந்து கார்டிவ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இதுவரை 88 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன் இவற்றில் இங்கிலாநது அணி 35
வெற்றிகளையும் இந்தியா அணி 47 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இரு போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 4 போட்டிகள் கைவிடப்பட்டன.
இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள 35 போட்டிகளில் இங்கிலாந்து அணி 18 வெற்றிகளையும் இந்தியா அணி 12 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. 4 போட்டிகள் கைவிடப்பட்டன.
டெஸ்ட் போட்டிகளில் மோசமான தொடர் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா அணி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை காட்டி மீள் வருகையை காட்டும் என நம்பப்பட்ட வேளையில் முதலாவது போட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் பலமாக இருப்பதுடன் தரப்படுத்தல்களில் இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு அணிகளுக்குமிடையிலான முதற் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமையால் இன்றைய இரண்டாவது போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

ad

ad