புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014








""ஹலோ தலைவரே.. நம்ம மாநிலத்திற்குத் தமிழ்நாடுங்கிற பெயரைத் தந்தவர், திராவிட நாடு கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் முழங்கி முதல் பிரதமர் நேருவோட கவனத்தை ஈர்த்தவர். பிரிவினை கோரிக்கையை கை விட்டபோதும் மாநில சுயாட்சியை வலியுறுத்தியவர், சீரிளமைத் தமிழின் அழகை பேச்சிலும் எழுத்திலும் கையாண்டு மக்களின் மனங்களில் நிலைபெற்றவர். இறுதி ஊர்வலத்தில் கண்ணீரோடு திரண்ட லட்சக்கணக்கான மக்களால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். அந்தப் பேரறி ஞர் அண்ணாவுக்கு பாரத் ரத்னா விருது தரணும்னு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்காரு கலைஞர்.''

""மத்திய அரசில் தி.மு.க இடம்பெற்றிருந்த காலத்திலேயே இதை செய்திருக்கலாமே? தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அப்துல்கலாம் இவங்களெல்லாம் பாரத் ரத்னா விருது பெற்றவங்களாச்சே!''

""தலைவரே.. எம்.ஜிஆர். மரணமடைஞ்சபிறகு அவருக்கு பாரத் ரத்னா கொடுக்கப்பட்டது. அம்பேத்கர், சுபாஷ்சந்திரபோஸ் போன்றவங் களுக்கும் இப்படித்தான் ரொம்ப வருசம் கழிச்சிக் கொடுத்தாங்க. அப்புறம், இறந்தவங்களுக்கு இனிமேல் பாரத் ரத்னா விருது கிடையாதுன்னு மத்திய அரசு நிறுத்திடிச்சி. அதனாலதான் நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு இந்த விருதை சிபாரிசு செஞ்சப்ப கிடைக்கலை. இப்ப மோடி அரசு மறைந்த தலைவர்கள் பலருக்கும் பாரத் ரத்னா கொடுப்பது பற்றி பரிசீலிக்கிற தால, அந்த விருதுக்கு முழுத் தகுதி யுடையவரான அண்ணாவுக்குத் தரணும்னு கலைஞர் கோரிக்கை வச்சிருக்காரு.''

""பெருமை சேர்க்கிற கோரிக்கை தான்.. அண்ணா உருவாக்குன தி.மு.க.வுக்கும் பெருமைகள் தொடர்ந்து சேரணும்ல.. ஆனா, சர்ச்சை தகவல் களாகத்தானே வந்துக்கிட்டிருக்குது. கட்சிப்பதவி பறிக்கப்பட்ட கே.பி.ராம லிங்கம், தோல்விக்கு காரணம் மு.க.ஸ்டாலின்தான்னு உடனடியா குற்றம்சாட்டி ஓப்பனா பேட்டி கொடுத் தாரு. அப்படிப்பட்டவர், கலைஞரைத் திடீர்னு சந்திச்சிருக்காரு. இதையடுத்து, தி.மு.க.விலே மு.க.அழகிரி மறுபடியும் சேர்க்கப்படுவார்னு செய்திகள் வர ஆரம்பிச்சிடிச்சி. என்னதான் நடக்கு தாம் தி.மு.க.விலே?''

""கொஞ்சம் டீடெய்லா பேசு வோம்ங்க தலைவரே.. .. அழகிரி நீக்கத்துக்குப் பிறகு ஸ்டாலின்-கனிமொழி ஃபைட் கட்சி மேல்மட்டத்தில் புகைஞ் சுக்கிட்டிருக்குது. அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கல்யாண சுந்தரம் எழுதுன லெட்டரில் கனிமொழி யும் டார்கெட் செய்யப்பட்டிருந்தாரு. இது ஸ்டாலின் தரப்பு வேலைதான்னு கோபமான கனிமொழி இனி எந்த விதத்திலும் ஸ்டாலினோடு சமரசம் கிடையாதுன்னும், ஸ்டாலினோட அரசியல் வளர்ச்சிக்கு பிரேக் போடும் வேலைகளை செய்து, கட்சியில் தன் செல்வாக்கை உயர்த்திக்கணும்ங்கிற ப்ளானோட கனிமொழி காய் நகர்த்த ஆரம்பிச்சிருக்காரு.''

""அழகிரி தரப்பின் சப்போர்ட்டும் கனிமொழிக்கு இருக்கிறது சம்பந்தமா நாமே பேசியிருக்கோமே!''

""அழகிரி ஆதரவாளர்தானே கே.பி.ராமலிங்கம். அவர் ஸ்டாலினை எதிர்த்து பேட்டி கொடுத்தபிறகும், ராஜ்யசபாவில் தி.மு.க எம்.பி.யாத்தான் நீடிக்கிறாரு. பார்லிமெண்ட்டில் அவர் நல்லா செயல்படுவதா தி.மு.க.வோட ராஜ்யசபா தலைவரான கனிமொழியும் கலைஞர்கிட்டே சொல்லியிருக்காரு. 2ஜி தொடர்பான என்ஃபோர்ஸ்மென்ட் கேஸில் கனிமொழிக்கும் ஜாமீன் கிடைச்சிடிச்சி. அதற்கு ஷ்யூரிட்டி கொடுக்கணும். கே.பி. ராமலிங்கத்தை ஷ்யூரிட்டி கொடுக்கும்படி கனிமொழி கேட்டிருக்காரு. ராமலிங்கம் இதை அழகிரிகிட்டே சொல்ல, கனிமொழிக்கு நாம ஷ்யூரிட்டி கொடுக்காம யாரு கொடுக் கிறதுன்னு அவரும் சொன்னதால, கே.பி. ராமலிங்கம்தான் கனிமொழிக்கு ஷ்யூரிட்டி கொடுத்தாரு. ஜாமீன் கிடைச்சதுக்காக அழகிரியும் போனிலே கனிமொழிக்கு வாழ்த்து சொல்லியிருக்காரு.''
""அதெல்லாம் சரி.. கலைஞரை கே.பி. ராமலிங்கம் சந்திச்ச விவரத்தை சொல்லு.''

""ஷ்யூரிட்டி கொடுத்த கே.பி.ராமலிங்கம் வந்திருக்காருன்னு கலைஞர்கிட்டே சொல்லப்பட, அவரும் வரச்சொல்லுன்னு சொல்லியிருக்காரு. 10லிருந்து 15 நிமிடம் நடந்த இந்த சந்திப்பு சம்பந்தமாகத்தான் ஒவ்வொரு தரப்பிலிருந்தும் ஒவ்வொரு கதையா கிளம்புது. உண்மை என்னன்னு சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் விசாரிச்சேங்க தலைவரே.. .. நான் எடுத்த முடிவையே விமர்சிக்கிற அளவுக்கு நீ ஆளாயிட்டியான்னு ராமலிங்கத்துக்கிட்டே கலைஞர் கேட்டிருக் காரு. அப்படியில்லீங்க தலைவரேன்னு பதில் வந்திருக்குது. உன் ஆளு என்ன சொல் றாருன்னு அழகிரி பற்றி கலைஞர் கேட்டிருக்காரு.''

""ராமலிங்கம் என்ன சொன்னாராம்?''

""நீங்க இருக்கிறப்ப சி.எம். கேன்டி டேட்டா இன்னொருத்தரை நிறுத்தணும்னு குரல்கள் கிளம்புவதை அண்ணனால ஜீரணிக்கவே முடியலைன்னும், உங்களுக்கு எதிரா அவர் இல்லைன்னும் கட்சியில் திரும்பவும் சேர்த்து, பழைய பொறுப்பை மறுபடியும் கொடுத்துட்டா போதும்ங்கிறது தான் அவரோட நிலைன்னு கே.பி.ராம லிங்கம் சொல்லியிருக்காரு. கலைஞர் கேட்டுக்கிட்டாராம். அவ்வளவுதான் சந்திப்பு சமாச்சாரம். கலைஞரைப் பொறுத்த வரைக்கும் அழகிரியைத் திரும்ப சேர்க்கிறது பற்றி எந்த முடிவையும் உறுதியா எடுக்கலை. பழைய பதவியெல்லாம் கிடையாதுங்கிறதில் உறுதியா இருக்காராம்.''

""அழகிரியோட மூவ் என்ன?''

""பேரன்-பேத்திகள்னா கலைஞர் ரொம்ப பாசம் காட்டுவாருங்கிறதால தன்னோட மகன் துரைதயாநிதியை கலைஞர்கிட்டே அனுப்பி உடல்நலன் விசாரிக்கச் சொல்லியிருக்காரு. தன்னோட மனைவி கர்ப்பமா இருப்பதை துரை தயாநிதி தன்னோட தாத்தாகிட்டே சொல்லியிருக் காரு. அதுபோல அமெரிக்காவிலேயிருந்து வந்திருக்கிற அழகிரிமகள் அஞ்சுகச்செல்வியும் தாத்தா கலைஞரை நலன் விசாரிச்சிருக்காரு.''

""இதெல்லாம் நடந்தாலும், திரும்பவும் தி.மு.க.வில் சேர்வது சம்பந்தமான செய்திகளை அழகிரி மறுக்கிறாரே?''

""நெருக்கமான கட்சிக்காரங்ககிட்டேகூட அப்படித்தான் சொல்லியிருக்காருங்க தலைவரே.. டி.வி, பேப்பரில் வர்றதையெல்லாம் நம்பாதீங்க. பேராசிரியர்கிட்டே யிருந்து அறிக்கை வந்தால் மட்டும்தான் உண்மையான செய் தின்னு சொன்ன தோடு, நான் வருத்தம் தெரிவித் தெல்லாம் தலை மைக்கு கடிதம் எழுத மாட்டேன். நான் சொன்ன குற்றச் சாட்டுகள் உண்மை தான்ங்கிறதை தலைமை ஒப்புக்கொள்ளணும். அவங்களா என் னைக் கட்சியில் சேர்த்துக்கணும். அந்த நிலைமை வரும்னு சொல்றாராம்.''

""இந்த லேட்டஸ்ட் டெவலப்மென்ட்டுகளை மு.க.ஸ்டாலின் தரப்பு எப்படி பார்க்குது?''

""ஸ்டாலினைப் பொறுத்தவரை, 2ஜி கேஸில் தன்னை சிக்கவைக்க நினைக்கிற கனிமொழிதான், அழகிரியை மறுபடியும் கட்சிக்குள்ளே கொண்டு வந்து தனக்கு சிக்கலை உண்டாக்கப் பார்க்கிறதா நினைக்கிறாராம். ஸ்டாலின் ஆதரவாளர்களெல் லாம் அவரை முதல்வர் வேட்பாளரா முன் னிறுத்தணும்ங்கிறதில் முன்னைவிட தீவிரமாயிட் டாங்க. மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்திச்சி ஆலோசனை நடத்துறாரு ஸ்டாலின். கரூர் மாவட்ட சந்திப்பின்போது தலைமை செயற்குழு உறுப்பினரான வக்கீல் மணிராஜ் பேசுறப்ப, தேர்தலுக்கு 15 மாசத்துக்கு முன்னாடியே மோடி யை பிரதமர் வேட்பாளரா முன்னிறுத்திப் பிரச்சாரம் செஞ்சதாலதான் அவங்களால பெரியளவில் ஜெயிக்க முடிந்தது. அதுபோல வரும் ஜனவரியிலிருந்து முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்னு அறிவிச்சி பிரச்சாரம் செய்யணும். கட்சியில் ஸ்டாலினுக்குத்தான் க்ளீன் இமேஜ் இருக்குது. வேற யாருக்கும் இல்லை. சோனியா வுக்கு எப்படி யு.பி.ஏ. சேர்மன் பதவி கொடுத் தாங்களோ அதுபோல கலைஞருக்கு முதல்வருக்கு இணையான பொறுப்பு கொடுக்கலாம். 2016-ல் ஸ்டாலின்தான் முதல்வர்னு பேசியிருக்காரு.''

""விஜயகாந்த்கிட்டே நரேந்திரமோடி பேசினாராமே?''


""அதைப்பற்றி நான் விளக்கமா சொல்றேன். ஆபரேஷன் செய்துகிட்டு வந்ததிலிருந்து பா.ஜ.க. தரப்பிலிருந்து யாரும் நலன் விசாரிக் கலைங்கிற வருத்தம் விஜயகாந்துக்கு இருந் திச்சி. ஆகஸ்ட் 25-ந்தேதி அவரோட பிறந்த நாளன்னைக்கு காலை ஏழரை மணிக்கு பிரதமர் மோடிகிட்டேயிருந்து போன். ஹேப்பி பர்த் டேன்னு சொல்லி வாழ்த்திட்டு, ரெண் டொரு வார்த்தைகள் பேசிய மோடி, பிரேமலதாகிட்டே போனை கொடுக்கச் சொல்லி அவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு அரசியல் நிலவரங்களைப் பேசியிருக்காரு. மொத்தம் 6 நிமிடம் நீடிச்ச இந்த போன் உரை யாடலின்போது, ஜெ. நம்பகத்தகுந்தவரல்லன்னு பிரேமலதா சொன்னதை மோடி கவனமா கேட்டுக்கிட்டாராம். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, மோகன்ராஜுலு, வானதி சீனிவாசன் எல்லோரும் ஒண்ணா விஜயகாந்த் வீட்டுக்குப் போய் நேரில் வாழ்த்தினாங்க. அப்ப தமிழிசைகிட்டேயும் "உங்க பேட்டியில அ.தி. மு.க. அட்டாக் கடுமையா இல்லையே'ன்னு விஜய காந்த் கேட்டிருக்காரு. வைகோ உள்ளிட்ட கூட் டணித் தலைவர்கள் போனில் வாழ்த்த, ராம தாஸ் மட்டும் லைனில் வரலையாம். காங்கிரஸ் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்னு பலரும் போனில் வாழ்த்திய தில் விஜயகாந்த் ஹேப்பி.''

ad

ad