புதன், நவம்பர் 26, 2014

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்தும் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று மனிதவுரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே ஹுசைன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க விடயங்கள் குறித்து பேசுவதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். விசாரணைகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் திகதி முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் மூடப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் நடத்தும் விசாரணைகளின் போது பக்கச்சார்பின்மை, நேர்மை, சுதந்திரம் போன்றவை பின்பற்றப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.