26 நவ., 2014

பிரபாகரன் பிறந்தநாள் : 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  பிரபாகரன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.   மேலும் காலை உணவளித்தும் குழந்தைகளுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு, தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், வள்ளியூர் வீரக்குமார், விடுதலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.