புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2014

ஐ.தே.கட்சி காரியாலயம் மீது துப்பாக்கி சூடு: அதிஸ்டவசமாக தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின் தேர்தல் காரியாலயம் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மாவில்மடயில் உள்ள கட்சி காரியாலயத்தின் மீதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காரியாலயத்தில் இருக்கவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad