26 நவ., 2014

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரபாகரன் பிறந்த நாள்
விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரனின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது

    இந்த நிலையில் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரபாகரன் பிறந்த நாள் விழாவை பழ.நெடுமாறன், ம.நடராஜன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினார்கள். 

   தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மேலும் நாளை மாவீரர் தினத்தை முன்னிட்டு முற்றத்தின் முன்பு உள்ள தமிழ்தாய் சிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பல ஊர்களில் இருந்தும் தமிழின உணர்வாளர்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.