புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

தேர்தல் களத்தில் 215 பேருந்துகள்; சுந்தரம் அருமைநாயகம்


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு இ.போ.ச யாழ். சாலையில் இருந்தும், யாழ். மாவட்ட தனியார் பஸ் சங்கத்திலிருந்தும் பேருந்துகள் 
பயன்படுத்தப்படவுள்ளதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கும் மீண்டும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளைக் கொண்டு வருவதற்கும் இவை பயன்படுத்தப்படவுள்ளன.

இன்று பிற்பகல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.  அதற்கமைய தேர்தலுக்காக  65 இ.போ.ச பேருந்துகளும்,  150 தனியார் பேருந்துகளும்  இவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளன.

எனவே யாழ். மாவட்ட அரச அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இருதரப்பும் உடன்பட்டுள்ளது. எனினும் பயனிகளைப் பாதிக்காத வகையிலேயே பேருந்துகள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றது என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad