புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை; மைத்திரிபால


நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்து கொண்டனர். இந்த நாட்டை பிளக்கவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 
 
எதிர்வரும் மூன்று நாட்களில் கடுமையான தேர்தல் வன்முறைகளில் ஈடுபட ஆளுந்தரப்பு முயற்சித்து வருகின்றது.  நாம் சமாதானமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்கிறோம்.
 
பாரிய வெற்றியுடன் நாம் புதிய யுகத்தைப் படைப்போம். பௌத்த மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நான் பதவிக்கு வந்த பின்னர் நாட்டைப் பிளவுபடுத்த புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
 
நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். ஆட்சிக்கு பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் அகற்ற மாட்டேன் அத்துடன் 'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை.
 
சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-

ad

ad