புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்வு


 நியூஸிலாந்தின் தென்தீவு பகுதியில்  இன்று  காலை பாரிய பூமியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து  அதிகாரிகள் அபாய எச்சரிக்கை
விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த பூமியதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கிறிஸ்சேர்ச்சின் மேற்குப் பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள  ஆர்தூர் பாஸ் பகுதிக்கு அருகில் இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.
 
இந்த பூமியதிர்வில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ உடனடியாக தெரியவரவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  
 
இதேவேளை 2011ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூமியதிர்வில் 185 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
-

ad

ad