புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

கொழும்பில் மக்கள் வெள்ளம்! பொதுமக்களின் ஆதரவுக்கு முன்னால் கண்கலங்கிய பொது வேட்பாளர்



எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது.
திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கடுமையான உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்டு அவருக்கு கண் கலங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்று அறிந்து கொண்ட அவர், தனது உரையின் து கண்கலங்கி, சற்றுத் தடுமாறினார்.
எதிர்வரும் எட்டாம் திகதி தான் வெற்றி ற்றவுடன் அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு இலங்கையை தான் உருவாக்குவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன  தனது உரையின்போது உறுதியளித்தார்.
48 மணித்தியாலங்களுக்குள் புதிய அரசாங்கம்- மைத்திரிபால சிறிசேன
எவ்வித கட்சி மாறல்களும் இன்றி எதிரணியின் இறுதி பிரசாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு முடிவடைந்தது.
கொழும்பு மருதானையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
ஏற்கனவே மொரட்டுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மருதானை கூட்டத்துக்கு தாமதமாகியே வந்தார்.
இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அது இடம்பெறவில்லை.
இந்தநிலையில் அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, 10 வருட மஹிந்தவின் ஆட்சி முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகா,அத்துரலியே ரத்தன உட்பட்ட பல தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர்.

ad

ad