புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கல்முனை மாநகரசபை முதல்வர்


news
தமிழர் தரப்பினால் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதற்கு கல்முனை மாநகரசபையிடம்  அனுமதிகோரப்பட்டபோது அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை  மாநகரசபையின் முதல்வர் நிஸாம் காரியப்பர் நிராகரித்துள்ளார்.

கல்முனை மாநகரசபை ஆளுகைக்குற்ப்பட்டசாய்ந்தமருதில் கலாச்சாரமண்டபம் ஒன்றில்லாததன் காரணமாக அப்பிராந்திய மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே மாநகரசபையின் முயற்சியில், சாய்ந்தமருதில் கலாச்சாரமண்டபம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து அமைக்க ஆவணசெய்ய வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஒன்றை குறித்த மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் மாநகரசபை அமர்வின் போது சபைக்கு முன்வைத்தார்.

இதன் போது பிரதிமுதல்வரால் சபையில் முன்வைக்கப்பட்ட கலாச்சாரமண்டபம் தொடர்பான பிரரணை விடையத்தில் கருத்துத் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார்,

தமிழர் தரப்பினால் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதற்கு கல்முனை மாநகரசபையிடம்  அனுமதிகோரப்பட்ட போது அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

உறுப்பினர் எஸ்.ஜெயக்குமாரின் குற்றச்சாட்டை  நிராகரித்தது பதிலளித்த கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர்,

கல்முனை மாநகரசபை தமிழர் கலாச்சாரமண்டபம் ஒன்றை அமைப்பதை வரவேற்பதாகவும் கல்முனை மாநகரசபை எவ்வித தடையையும் விதிக்கவில்லை என்றும் சரியான ஆவணங்களைக் கொண்டுவந்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
-

ad

ad