புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

ரொனால்டோவுடன் மோதும் நெய்மர்


எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என
பிரேசில் வீரர் நெய்மர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்பெயினில் தற்போது லா லிகா கால்பந்துத் தொடர் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி சார்பில் நெய்மரும், ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரியல் மாட்ரிட்­ கொர்டோபா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரியல் மாட்ரிட் அணி 2­1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் நடுவே ரொனால்டோ நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொர்டபோ அணியின் தடுப்பாட்டக்காரர் எடிமர் பிராகாவை ஒரு கட்டத்தில் திடீரென உதைத்த ரொனால்டோ, இன்னொரு வீரரான ஜோஸ் கிரஸ்போவை கன்னத்தில் அறைந்து விட்டார். இதனால் சிவப்பு  அட்டை கொடுக்கப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நெய்மர் கூறுகையில், இது தவறான செயல், அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். முன்தடுப்பு வீரர்களுக்கு இதுபோல நேரிடுவது இயல்புதான், ஆனால் இது தவறானது, நாம் தான் அடக்கமாக இருக்க வேண்டும். ஜினெடின் ஜிடேனுக்கும் இதுபோல நேர்ந்துள்ளது, எனக்கும் நேர்ந்துள்ளது.

ரொனால்டோவையும் அதுபோலத்தான் எதிரணியினர் தூண்டியுள்ளனர். ஆனால் அதற்காக எதிரணியினரை உதைப்பது, அறைவது என்பது தவறானது. கண்டிப்பாக அவரைத் தண்டிக்க வேண்டும், கடுமையாக தண்டிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad