புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்! ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு!



காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

நான் பாரம்பரிய (காங்கிரஸ்) அரசியல் குடும்பத்தை சேர்ந்தவள். இளவயது முதலே என் உடலில் காங்கிரஸ் ரத்தம் தான் ஓடுகிறது. நான் நம்பிய காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமையால் நான் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டேன். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

சட்டத்தின்படியும், விதியின்படியும் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டேன். இந்திரா, ராஜீவ் வழியில் சுற்றுச்சூழல் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டேன். பெரு நிறுவன திட்டங்கள் தொடர்பாக ராகுல்காந்தி என்னை நேரில் அழைத்துப் பேசினார். இயற்கைக்கு ஊறுவிளைவிக்கும் என்ற காரணத்தால் ஒரு சில திட்டங்களுக்கு நான் அனுமதி அளிக்க மறுத்தேன். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சக அமைச்சர்களால் எச்சரிக்கப்பட்டேன். சுற்றுச்சூழல் வளங்களை காக்க வேண்டும் என்று சோனியாவிடம் இருந்து கடிதம் பெற்றேன். ஒரு நல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவே நான் செயல்பட்டேன். 

நவம்பர் 17ஆம் தேதி அஜய் மக்கான் தெலைபேசியில் தொடர்பு கொண்டு மோடிக்கு எதிராக பேசும்படி கூறினார். கொள்கை ரீதியாகவே விமர்விக்க வேண்டும். தனி நபர் விமர்சனம் கூடாது என எனது கருத்தை தெரிவித்தேன். மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும்படி சோனியா கூறியதாக மன்மோகன் சிங் தெரிவித்தார். கட்சிப் பணிக்காகவே அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக கூறினார்கள். உண்மை அவ்வாறு இல்லை. 

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். அழைப்பு வந்தாலும் எனது முடிவில் மாற்றம் இல்லை. வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் தற்போது இல்லை என்றார். 

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், எனது கட்சியே என்னை ஏமாற்றிவிட்ட பிறகு பாஜகவை ஏன் நான் குறை சொல்ல வேண்டும் என்றார். 

ad

ad