புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது : ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் எலியாட்!


லகக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கிராண்ட்
எலியாட் தென்ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்.
உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு இக்கட்டான சூழலில்  73 பந்துகளில் 84 ரன்களை அடித்தார் அந்த அணியின் வீரர் கிராண்ட் எலியாட். இவரது அபார ஆட்டத்தால்தான் நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
ஜோகன்ஸ்பர்க்கில் மருத்துவர்  ஒருவருக்கு மகனாக பிறந்த எலியாட், நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கென் ரூதர்ஃபோர்ட் அறிவுரையின் பேரில், மீண்டும் கடந்த 2001ஆம் ஆண்டு  நியூசிலாந்தில் குடியேறினார்.
தென்ஆப்ரிக்க 'ஏ ' அணியில் இடம் பிடித்திருந்த எலியாட், இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக, முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் எலியாட் களமிறங்கினார். அதே தொடரில் ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணிக்காக அவர் விளையாடத் தொடங்கினார். இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில்  விளையாடியுள்ள எலியாட், 3 ஆயிரத்து 856 ரன்களை அடித்துள்ளார்.
எலியாட்டின் தந்தை நியூசிலாந்தின் வெல்லிங்டன் பகுதியை சேர்ந்தவர். ஜோகன்ஸ்பர்க்கில் கல்வி, பட்டபடிப்பு படித்த எலியாட், இப்போது தென்ஆப்ரிக்க அணிக்கே வில்லனாக மாறியுள்ளார் - வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக.
இந்த போட்டியில் சிறந்த வீரருக்கான விருதும் எலியாட்டுக்கு வழங்கப்பட்டது. தென்ஆப்ரிக்க அணியை துரதிர்ஷ்டம் எப்படியெல்லாம் சுற்றி அடிக்கிறது பாருங்கள்..

ad

ad