புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

பிரான்சில் 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து


பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
 
ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் 142 பயணிகள்,2 விமானிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணம் செய்தனர். 
 
இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனை காவல்துறையும், விமான போக்குவரத்து துறையும் உறுதி செய்துள்ளது. 
 
ஆனால் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
 
மேலும் குறித்த விபத்தில் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ad

ad