புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

19 வது திருத்தத்தில் முரண்பாடுகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலை ஏற்படும்



சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் 19 வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறைமை மாற்றத்திற்கான திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக சமர்ப்பித்தால், இரண்டுக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவதாகவே அறிவித்திருந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் 19 வது திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறிப்பாக 19 வது திருத்தச் சட்டத்தில் அமைச்சரவைக்கு தலைமை தாங்குபவர் யார் என்பது பற்றிய விடயம் உட்பட சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்லாத முறையிலேயே இந்த அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த முரண்பாடுகள் காரணமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை எற்படலாம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறினார்.
இதேவேளை, வண. அத்துரலியே ரத்ன தேரர் 19 வது திருத்தச் சட்டம் தொடர்பாக பேசும் போது இத்திருத் தத்திற்காக எம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப் படவில்லை. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத முறையிலேயே இச்சட்ட திருத்தம் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டாலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலைமையையே தோற்றி விப்பதாக இருக்கிறது என்றார்.

ad

ad