புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி?


பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில்,  பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல்.

ஏழ்மை நிலையில் இருந்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள ரொனால்டோவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, டாக்குமென்ட்ரி படம் எடுக்கப்படவுள்ளது. டாக்குமென்ட்ரி படம் எடுப்பதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அகாடமி விருது வென்ற பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், இந்த படம் உருவாகிறது.  ரொனால்டோவே இந்த படத்தை தயாரிக்கிறார்.
ரொனால்டோவின் குழந்தை பருவத்தில் இருந்து அவர் சந்தித்த சோகங்கள், 11 வயதாக இருக்கும் போது தந்தையின் இழப்பு, ரொனால்டோவின் தாயார் குழந்தைகளை வளர்க்க பட்ட கஷ்டங்கள், கால்பந்து வீரராக உருவானவிதம், மான்செஸ்டர் யுனைடெட்டில் ரொனால்டோ சந்தித்த சவால்கள், ரியல்மாட்ரிட்டில் இணைந்த விதம், மெஸ்சியின் புகழால் ரொனால்டோ இருட்டடிப்பு செய்யப்பட்டது வரை படமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

ரொனால்டோவின் காதலி இரினா ஷயாக்குடன் ஏற்பட்ட பிரிவு, மகன் ஜுனியர் ரொனால்டோ பற்றியெல்லாம் அந்த டாக்குமென்ட்டிரியில் சொல்லப்படுமா? என்று தெரியவில்லை. எனினும் தனது ரசிகர்களுக்கு இந்த படம் வரப்பிரசாதம் என்று ரொனால்டோ கூறுகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ad

ad