புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

மூன்று சிவில் பிரiஜகளை பாராளுமன்றம் நிறைவேற்ற தவறினும் ஆணைக்குழுக்களை அமைக்க முடியும்


அரசியலமைப்பு சபைக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்று சிவில் பிரஜைகளின் நியமனத்தை எதிர்வரும் தினங்களுக்குள் பாராளுமன்றம் நிறைவேற்ற தவறினால் அவர்கள் மூவரும் இல்லாமலேயே எஞ்சியுள்ள 07 பேரைக் கொண்டு அரசியலமைப்புச் சபையினை நிறுவி ஆணைக்குழுக்களை அமைக்க முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சியின்
தேசிய அமைப்பாளருமான ஜயம்பத்தி விக்கிரமரட்ண தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள 03 சிவில் பிரஜைகளின் பெயரும் நிறைவேற்றப்படாவிடின் 07 பேரைக் கொண்டு அரசியலமைப்பு சபையை நிறுவி 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி அமைக்கப்படவுள்ள சகல ஆணைக்குழுக்களையும் நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றும் ஜயம்பதி விக்கிரமரட்ண கூறினார்.
காலி நகர மண்டபத்தில் நடைபெற்ற ‘புரவெசி பலய’ அமைப்பின் விசேட கருத்தரங்கில் கலந்துக்கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சபை 07 சிவில் பிரஜைகளைக் கொண்டும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டும் நிறுவுவதென ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இந்த விகிதாசாரம் இறுதியில் 03-07 என்ற நிலைமையில் நிறைவேற்றப்பட்டு அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சபையை நிறுவுவதற்கு பாராளுமன்றம் செயற்படுவதனை காணக்கூடியதாக விருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சிவில் பிரஜைகள் மூவர் இல்லாமல் இந்த ஆணைக்குழுக்களை உருவாக்கும் நிலைமைக்கு இடைக்கால நடவடிக்கை யாக ஜனாதிபதி தீர்மானம் மேற்கொள் வாரென நம்பிக்கை தெரிவித்த ஜயம்பதி, எவ்வாறாயினும் இந்த ஆணைக்குழுக்கள் அனைத்தையும் அமைத்து நாட்டிலுள்ள
துரதிஷ்டவசமான அரசியல் கலாசாரத்தை முடிவுக்குகொண்டுவரும்
செயற்பாடுகள் வெகுவிரைவில் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

ad

ad