புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

பறக்கும் தட்டு சோதனையில் சாதித்தது நாசா


வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகம் உள்ளிட்ட கோள்களில் தரையிறங்குவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ பறக்கும் தட்டு போன்ற ஒரு விண்கலத்தை உருவாக்கியிருந்தது.
 
இந்த பறக்கும் தட்டை ஹவாய் தீவில் 2 ஆவது தடவையாக சோதனை நடத்திய ‘நாசா’ பிரம்மாண்ட பலூனின் உதவியுடன் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்திற்கு எடுத்துச் சென்றது.
 
பிறகு, அந்த பலூன் விடுவிக்கப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டிருந்த  (LDSD) என்ற ரொக்கெட் என்ஜின் உதவியுடன் 1 லட்சத்து 80 ஆயிரம் அடி உயரம் வரை கொண்டு செல்லப்பட்டது.
 
பின்னர், விண்ணுக்கு செலுத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட பரசூட்டும், ரொக்கெட் என்ஜினும் பசுபிக் கடலில் பத்திரமாக வந்து இறங்கியதாக ‘நாசா’ தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் ‘நாசா’ தெரிவி்த்துள்ளது.
 
மேலும் செவ்வாய் கிரகத்திற்கு ஆட்களை அனுப்பும் திட்டத்திற்காக தீவிர ஆராய்ச்சியில் களமிறங்கியிருக்கும் ‘நாசா’ தன் ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இந்த பறக்கும் தட்டை 2 ஆவது முறையாக சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad