சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த வழக்கில் முன்னாள் டெல்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் டோமர் நேற்று அம்மாநில போலீசாரால் கைது
இதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த அவர், முதல்வர் கெஜ்ரிவாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அம்மாநில புதிய சட்ட அமைச்சராக அக்கட்சி எம்.எல்.ஏ.வும், குடிநீர் வாரிய துணைத் தலைவருமான கபில் மிஸ்ராவை நியமித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆளுநர் நஜிப் ஜங்கை சந்திக்க உள்ள கெஜ்ரிவால், அவரிடம் டோமரின் ராஜினாமா கடிதம் மற்றும் கபில் மிஸ்ராவை சட்ட அமைச்சராக நியமித்ததற்கான கடிதம் ஆகியவற்றை சமர்ப் பிப்பார்.