புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்: மோடியின் அதிரடி!









இந்திய ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த, பிரதமர் அளித்த உத்தரவையடுத்து நடந்த தாக்குதலில், 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்
என்று மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தெரிவித்து உள்ளார். 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சான்டெல் மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் பாணியில், கடந்த 4 ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர். குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய இந்த தாக்குதல்களில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் மணிப்பூரில் ராணுவத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இதனையடுத்து தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. 

இந்நிலையில், மணிப்பூர் தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் மியான்மர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் உறுதியான உளவுத்தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து எச்சரிக்கையான இந்திய ராணுவம், விமானப்படை உதவியுடன், நேற்று காலை மியான்மர் எல்லைக்கு அப்பால், தீவிரவாதிகளை குறிவைத்து அதிரடியான  தாக்குதல்களை நடத்தியது. அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவ கமாண்டோக்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய ராணுவம் எல்லைக்கு அப்பால் சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அபூர்வமான நிகழ்வு ஆகும். மற்ற நாட்டின் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  

இந்த நிகழ்வை பொறுத்தவரை மியான்மர் அரசின் ஒப்புதலுடனே  இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்ற தகவலை மத்தியஅமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தெரிவித்து உள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

“இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, இந்திய ராணுவம் உள்ளே வராது என்ற நம்பிக்கையில் மியான்மரில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று  ஒளிந்துகொள்வது இந்த தீவிரவாதிகளின் வழக்கம். இது தற்போது முழுவதும் தெளிவாகியுள்ளது. இதுவரையில் இல்லாத வகையில், நமது  பிரதமர் மிகவும் தைரியமான முடிவினை எடுத்தார், மியான்மருக்குள் புகுந்து  தீவிரவாதிகளைப் பின்தொடர்ந்து  உடனடியாக தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு அனுமதி வழங்கினார்” என்று தெரிவித்து உள்ளார். 

மேலும் அவர், “இந்திய ராணுவம் மியான்மர் எல்லைக்குள் புகுந்து, இரண்டு தீவிரவாத முகாம்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி, முழு முகாமையும் அழித்துவிட்டு பத்திரமாக திரும்பியது” என்பதை நாங்கள் உறுதிசெய்து உள்ளோம் என்றும் கூறினார். 

இதேபோன்று இந்தியாவின்  மேற்குப்  பகுதிகளில், பாகிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் இந்தியா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “தீவிரவாதிகளுக்குப்  புகலிடம் அளிக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரே செய்தியைக் கூறிக்கொள்கிறோம். மேற்கு மட்டுமல்ல எந்த ஒரு   குறிப்பிட்ட நாட்டிலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோம். இந்தியாவுக்குள்ளும் தீவிரவாத  எண்ணத்துடன் எந்த ஒரு இயக்கம் செயல்பட்டாலும் விரட்டுவோம் ” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

ad

ad