புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல்களை மஹிந்தவுக்கு அறிவிக்கும் பொலிஸ் உயர் அதிகாரி

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அன்றாடம் அழைகப்படும் நபர்களின் பட்டியல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கைக்கு அன்றைய தினமே கிடைத்து விடுவதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் தகவல்கள், பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாகவே வெளியாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினமும் கிடைக்கும் பட்டியலில் உள்ள நபரின் தகவல்களை தனக்கு நெருக்கிய வழக்கறிஞர்கள் மூலம் ஆராயும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வாக்குமூலம் வழங்குபர்களினால் தனக்கு இடம்பெறவுள்ள ஆபத்து தொடர்பில் அனுமானித்ததன் பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்கும் நபர்களை ராஜபக்சவுக்கு நெருங்கிய பிரபல வழக்கறிஞர் ஊடாக தொலைபேசியில் உரையாடி அச்சமடைய செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் திணைகளத்தில் செயற்படுகின்ற இந்த உயர் அதிகாரி சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் உடனடியாக அவரை விடுதலை செய்யுமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் குறித்த உத்தரவுகளை மீறியே சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவை கலைக்குமாறு கடந்த நாட்களில் எதிர்ப்பில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ராஜபக்ச தரப்பினருக்கு குறித்த பொலிஸ் உயர் அதிகாரி வெளிப்படையாக ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad