புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

'உடம்பை பார்த்துக்கோங்க...அப்புறம் ஜாமீன் கேட்கக்கூடாது!'- ஜெ.வுக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
 

கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 2016 ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, " தனியாக நிற்க போகிறோமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறோமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பிகார் தேர்தலுக்கு பிறகு பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறும். அப்போது இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

அதிமுக ஆட்சி பற்றிய கேள்விக்கு, " மக்களுக்காக எந்த வசதியும் செய்யவில்லை. எல்லா ஊர்களிலும் கொள்ளைகள் ஏராளமாக நடந்து வருகின்றன. நான் நினைப்பது, இந்த ஆட்சி இந்தியாவிலேயே இருக்கிற மாநிலங்களிலேயே மோசமான ஆட்சி. வரும் தேர்தலில் இந்த ஆட்சி மீண்டும் வர விடாமல் தோற்கடிக்க வேண்டும்" என்று  பதில் அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்து வருகிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "  (கோவையிலிருந்து) பக்கத்தில்தான் இருக்கிறார். நீங்கள் (செய்தியாளர்கள்) போய் பாருங்கள். அவர் சிறைக்கு போகப்போகிறார். நல்லா உடம்பை பார்த்துக்கொள்ளட்டும். அப்புறம் உடம்பு சரியில்லை என்று ஜாமீன் கேட்கக்கூடாது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக தோற்றுப்போவார். அவர் ஜெயிலுக்கு போவது உறுதி; தப்ப முடியாது" என்றார்.

மக்கள் நல கூட்டணி மிகப்பெரிய கூட்டணியாக உருவெடுக்கும் என வைகோ கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "வைகோ சொல்வதை நீங்கள் நம்புவீங்களா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று இப்போதும் சொல்கிறார் இல்லையா? அந்த நம்பிக்கையுடனேயே இருக்கட்டும்" என்று சுவாமி கூறினார்.

காங்கிரசில் நடிகைகளை முன்னிலைப்படுத்துகிறார்களே என்று கேள்விக்கு,  "தமிழ்நாட்டுடைய வியாதியே அதுதானே. நடிகர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும்" என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களை மத்திய அமைச்சர்கள் தரக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, "அமைச்சர்கள் யாரும் அப்படி பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் அவர்கள் மீது வழக்கு போடட்டும். அவர்களுக்காக நானே வாதாடுவேன். வழக்கு போடுபவர்களை ஒருநாளைக்குள் காலி செய்துவிடுவேன். அது மிகப்பெரிய பொய். இதை காங்கிரசும், வெளிநாட்டு சக்திகளும் சேர்ந்து இப்படி செய்திருக்கிறார்கள்" என்று பதிலளித்தார். 

எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி கொடுக்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, "கொடுக்கட்டுமே, அவர்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர்கள். அவர்களுக்கு முதலில் இந்த விருதுகளே கிடைத்திருக்க கூடாது. இதுவரை 1000 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் 40 பேர் திருப்பி கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.

இந்துத்துவா கொள்கையை பாஜக பின்பற்றுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "நாட்டிலே 80 சதவீதம் பேர் இந்துக்கள். இந்துவை பற்றி பேசினால் தவறா? இந்துக்கள் என்ன பண்ணினாலும் தவறு, சிறுபான்மை மக்கள் என்ன பண்ணினாலும் சரியா? இதுபோன்ற மனப்பான்மையை நாங்கள் மாற்ற பார்க்கிறோம்" என்று பதிலளித்தார் சுவாமி.

ad

ad