செவ்வாய், நவம்பர் 24, 2015

அநுராதபுரம் நகரில் உயர்தர வகுப்பு மாணவி கடத்தல்! பட்டப்பகலில் துணிகர சம்பவம்


அநுராதபுரம் நகரில் வைத்து இன்று முற்பகல் யுவதியொருத்தி துணிகரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் யுவதியொருத்தியே சனநடமாட்டம் அதிகமான நகரில் மையப்பகுதியில் வைத்து இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஒன்றில் வந்த நபரொருவர் யுவதியை பலாத்காரமாக ஆட்டோவுக்குள் உள்ளிழுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக குறித்த யுவதியுடன் சென்ற தோழியொருவர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடத்தப்பட்ட யுவதிக்கு காதல் தொடர்பு ஒன்று இருந்ததாகவும், அவரது முன்னாள் காதலரே இவ்வாறு யுவதியைக் கடத்தியிருக்க வேண்டும் என்றும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.