புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 நவ., 2015

ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகள்! பார்வையிட்டார் சித்தார்த்தன்


வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்
நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ். ஊரெழுப் பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்திருக்கின்றன.
இந்நிலையில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
கிராம சேவையாளர் சிவானந்தன் அந்தப் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துச் சென்று பாதிப்புக்களைக் காண்பித்து அவர்களுக்கு உதவ
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அங்கிருந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர், கோப்பாய் பகுதி பிரதேச செயலர் பிரதீபனுடன்  தொடர்பு கொண்டு அடுத்து வரவிருக்கின்ற வீட்டுத் திட்டத்தில் அந்தப் பகுதிக்கும் வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்கியிருந்தபோது அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்
முல்லைத்தீவு உடையார்கட்டு இருட்டுமடு, நல்லகண்டல், வசந்தபுரம், மாந்தளன், கள்ளப்பாடு, வண்ணாங்குளம் போன்ற பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்தனர் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், கந்தையாசிவநேசன்.
இதன்படி வட மாகாணசபை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மாகாணசபை உணவு வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட உலருணவு நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.