புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

வடமாகாணத்தின் வர்ண இரவு நிகழ்வில் வடக்கின் நட்சத்திரமாக டினேயா

6
பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட
தொடரில் தங்கப் பதக்கத்தையும் வென்ற வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவியான ஜே.ஜே.பி.டினேஜா வடமாகாணத்தின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு வர்ண இரவுகள் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரினால் நேற்று கௌரவிக்கப்பட்டார்.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய 6ஆவது வர்ண விருது வழங்கும் நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளார் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் 19வயதுப் பிரிவில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற ஜே.ஜே.பி.டினேஜா, அதேவயதுப் பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்ற யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந், ஆகியோருடன் தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெற்றிபெற்ற 14 வீரவீராங்கனைகளும், ஆண்களிற்கான கபடியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற வவுனியா மாவட்ட அணியும், உதைபந்தாட்டத்தில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற யாழ்., மன்னார் மாவட்ட இணைந்த அணி வீரர்களும் கௌரவிக்கபட்டதோடு இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை அள்ளிய 54 வீர வீராங்கனைகளும், பெரு விளையாட்டுக்களில் பதக்கங்களைப் பெற்ற 10 பாடசாலைகள் அணிகளும், கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட போட்டிகளில் பங்குபற்றி 63 வீர வீராங்கனைகளுடன் அவர்களிற்கான பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை விளையாட்டுத் திணைக்களத்தினாhல் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஜெனிற்றா, எஸ்.விதுசன், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரி.அன்ரனி டெல்மன், ரி.டென்சிகா ஆகியோருடன், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கனகேஸ்வரி ஆகியோரிற்கும் சிறப்பு பரிசில்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வடமாகண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினரும் விளையாட்டுத்துறை இணைப்பாளருமான இ.ஆனல்ட், வடமாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன், எஸ்.கஜதீபன், கே.தர்மலிங்கம், மற்றும் சி.அகிலதாஸ் ஆகியோருடன் வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், மற்றும் வலயக்க கல்விப் பணிப்பாளர்கள், உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர், விளையாட்டு திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ad

ad