புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

சு. கவின் 26 அமைச்சர்கள் பொது எதிரணியுடன் பேச்சு!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொது எதிரணியுடன் கலந்தாலோசிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 அமைச்சர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரவு - செலவுத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை,
தேசிய பாதுகாப்பு, நாட்டின் பொருளாதார ஸ்திர நிலைமை போன்ற விடயங்கள் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்படுமென பொது எதிரணியின் பிரதி ஏற்பாட்டாளரும், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சர்கள் சிறு சிறு குழுக்களாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொது எதிரணியினருடன் ஆலோசனைகளை நடத்துவர் எனவும்,
அந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கேற்ப நாட்டின் எதிர்காலம் பற்றிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படுமெனவும்,
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் 26 பேரும் அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் எனவும் ரஞ்சித் சொய்ஸா மேலும் தெரிவித்தார்.

ad

ad