புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமா?[ பி.பி.சி ]


இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை வலியுறுத்தி சிவில் அமைப்புகளுடன் மனித உரிமை ஆர்வலர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந் ஓராண்டில் ஏற்பட்டுள்ள சில அரசியல் சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை முழுமையாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளது.
குறிப்பாக, சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனம், 19-ம் அரசியலமைப்புத் திருத்தம், வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் சில காணிகள் விடுவிக்கப்பட்டமை என்று சில முன்னேற்றங்களை புதிய அரசாங்கம் எட்டியுள்ளதாக கூறியுள்ள சிவில் சமூகம், உண்மையான அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளின்படி, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை இந்த ஆண்டில் அமைக்க வேண்டும் என்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம், உண்மை கண்டறிதல், நீதி மற்றும் நல்லிணக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு போன்றவற்றுக்கான நிறுவனங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் இந்த ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சர்வதேசத்துக்கு அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போகக்கூடுமோ என்கின்ற சந்தேகமும் கேள்விக்குறியும் எழுந்துள்ளதாகவும் அதனாலேயே சிவில் சமூகத்தினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தெற்காசிய சட்ட ஆய்வுகளுக்கான நிலையத்தின் இணை- நிறுவனர் நிரான் அன்கெட்டெல் தமிழோசையிடம் கூறினார்.
கடந்த ஓராண்டில் நாட்டின் மனித உரிமைச் சூழ்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முல்லைத்தீவு போன்ற முன்னாள் போர் வலயப் பிரதேசங்களில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் இன்னும் அச்சமான சூழ்நிலையே நிலவுவதாகவும் வழக்கறிஞர் நிரான் அன்கெட்டெல் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது

ad

ad