புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 1 வருடம் நிறைவடைந்த நிலையில் பொது மக்களின் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு பொது மக்களின் காணிகளைவிட்டு இராணுவம் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகின்ற போதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைமை வேறு விதமாக காணப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பொது மக்களின் காணிகளைவிட்டு இராணுவத்தை வெளியேற்றி உரிமையாளர்களிடம் காணிகளை கையளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 6 வருடங்கள் நிறைவுற்றும் நல்லாட்சி அமைக்கப்பட்டு 1 வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் வடக்கில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் பொதுமக்கள் குடியமர்ந்துள்ள காணிகளிற்கு அருகில் இவ்வாறு காணப்படும் இராணுவ முகாம்களை அகற்றி, பொது மக்களின் காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு கடந்த மாதத்தில் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ முகாம்கள் பலப்படுத்துவது தொடர்பாக எமது தளத்தில் செய்திகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad