புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

ரொறொன்ரோவிற்கு மீண்டும் ஒரு அதி தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை? - See more at: http://www.canadamirror.com/canada/55658.html#sthash.PkglvXUg.dpuf

கனடா- ரொறொன்ரோ சுகாதார மருத்துவ அதிகாரி ஒரு அதிதீவிர குளிர் காலநிலை எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்று இரவு முழுவதும்
மற்றும் நாளையும் விறைப்பான கடுங்குளிர் காலநிலை நகரில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடா சுற்றுசுழல் பிரிவின் கணிப்பின் பிரகாரம் இரவு முழுவதும் மற்றும் நாளை காலையும் வெப்பநிலை குளிர் காற்றுடன் கூடி -20C ஆக உணரப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இக்குளிர் காலநிலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு வீடற்றவர்களிற்கான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன. மக்கள் தங்குமிடங்களிற்கு செல்லவும் அதிகரிக்கப்பட்டுள்ள அவசர வெளிக்கள தேவை மையங்களை நாடவும் TTC டோக்கன்களும் வழங்கப்படும். ஜனவரி மற்றும் பிப்ரவரி வரை இரண்டு 24-மணி நேர அதிதீவிர குளிர் கால உட்புகல் மையங்கள் 323-டன்டாஸ் வீதி கிழக்கு மற்றும் 24- அகஸ்ரா அவெனியு ஆகிய இடங்களில் எந்நேரமும் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர குளிர் கால எச்சரிக்கை மறு அறுவித்தல் வரை நடைமுறையில் இருக்கும். குளிர் காலநிலையை சமாளிக்க அடுக்குகளில் ஆடைகளை அணியுமாறும் வெளிச்சத்திற்கு உட்படும் சருமங்களை மறைக்குமாறும் உலர்வாக இருப்பதோடு வெளிக்கள நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இக்காலநிலையினால் பாதிக்கப்பட்க்கூடிய நண்பர்கள் குடும்பம் மற்றும் அயலவர்களை கண்காணிக்குமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ப்படுகின்றனர். உதவி தேவைப்படும் எவரையாவது கண்டால் 311 அல்லது அவசர நிலைமையில் 911 அழைக்குமாறும் கூறப்படுகின்றது. இந்த குளிர்காலத்தில் விடுக்கப்படும் மூன்றாவது தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை இதுவாகும்

ad

ad