புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

ஜல்லிகட்டு நடத்தியதில் தடியடி - கல்வீச்சு : காளை கைது ( படங்கள்)



   தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு பிரியர்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சியினரும் கொதித்துப்போய் உள்ளனர். 

     ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளை அவிழ்துவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் போலிசார் பலத்த பாதுகாப்புகளை போட்டுள்ளனர். ஆனாலும் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தமிழகம் முழுவதும் அனுமதி வழங்க கோரி ஆர்பாட்டங்கள், தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி கிராமத்தில் வாடி வாசல் வரை காளைகளை கொண்டு வந்து கயிறு அவிக்காமல் அழைத்துச் சென்றனர்.

   ஆனால் மாலையில் வடவாளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த தகவல் அறிந்த போலிசார் வடவாளம் கிராமத்திற்கு சென்று குவிக்கப்பட்டிருந்தனர். 

   மாலையில் காளைகைள அவித்துவிட்டனர். அதை போலிசார் தடுக்க முயன்றனர். அதனால் விழா குழுவினருக்கும் போலிசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த கல்வீச்சில் கல்யாணி என்ற பெண் காவலர் உள்பட சிலர் காயமடைந்தனர்.

    விழா குழுவினர் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில் ஒரு காளை மட்டும் நின்றது. அந்த காலையை போலிசார் கைது செய்திரப்பதாக கூறினார்கள். மேலும் அந்த காளையை பிடித்துச் செல்ல பயந்த போலிசார் தஞ்சையில் இருந்து காளையை பிடித்துச் செல்ல காளைபிடி வீரரை அழைத்துள்ளனர். 

     இந்த சம்பவத்தால் வடவாளம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad