புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2016

கடலாடியில் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் - வீடுகள் சூறை : சாதிக்கலவரம் ஏற்படுமோ என அச்சம்

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அடுத்த பெருமாபாளையம் மற்றும் நவாப்பாளையம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில்
இரண்டு இளைஞர்கள் செல்லும்போது, போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.  ஒருவன் நவாப்பாளையத்தை சேர்ந்தவன்.  இன்னொருவன் பெருமாபாளையத்தை சேர்ந்தவன்.

இந்த தகராறு அடிதடியாக மாறியுள்ளது.  தன்னை  அடுத்துவிட்டான் என இரண்டு இளைஞர்களும் நண்பர்களுக்கு தகவல் சொல்ல, அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.  இதையடுத்து இரண்டு இளைஞர்களின் சண்டை, இரண்டு ஊர்களுக்கு இடையேயான மோதலாக மாறியது.  தங்கள் ஊர்க்காரர்களை அடித்துவிட்டார்கள் என இரண்டு ஊர்களுக்கும் தகவல் பரவ, இரண்டு ஊர்க்காரர்களும் திரண்டு வந்தனர்.  இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டனர்.  

இந்த மோதலில் பெருமாபாளையத்தில் பல வீடுகள்  சேதமடைந்தன.  இந்த தகவல் காவல் துறைக்கு செல்ல, பெரும் படையோடு சம்பவ இடத்திற்கு வந்தனர்.  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி, பெருமாபாளையம் வந்தார்.  இரவு 7 மணியளவில், எஸ்.பி. பொன்னியிடம் பாதிக்கப்பட்ட பெருமாபாளையத்தை சேர்ந்த மக்கள் புகார் கூறினர்.  அப்போது, எஸ்.பி. கண் முன்பே100 அடி தூரத்தில் இருந்த குடிசை வீட்டை மர்ம  கும்பல் தீவைத்து எரித்தனர். 

 இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.பி., தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.  

பின்னர் அங்கிருந்து கடலாடி காவல்நிலையம் சென்று,  பாதுகாப்பு பணிகளை முடிக்கிவிட்டுள்ளார்.  பிரச்சனைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். 

இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த இரண்டு கிராமங்களும் வெவ்வேறு சாதியைச்சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதனால்  சாதிக்கலவரம் ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

ad

ad